குரு பெயர்ச்சி பலன்கள் 2020 - 2021 (Guru Peyarchi Rasi Palangal) by KT ஜோதிடர்

கண்ணோட்டம்


குரு பெயர்ச்சி / (Guru Peyarchi) திரு கணித பஞ்சாங்கத்தின் படி வியாழக்கிழமை நவம்பர் 19, 2020 9:15 PM இந்திய நேரப்படி தனுசு (Sagittarius Rasi) ராசியில் இருந்து மகர (Capricon Rasi) ராசிக்கு இடப்பெயர்ச்சி நடக்கிறது. குரு பகவான் ஏப்ரல் 5, 2021 9:11 AM திங்கட்கிழமை வரை மகர (Capricorn Rasi) ராசியில் சஞ்சரிக்கிறார்.


குரு பெயர்ச்சி / (Guru Peyarchi) கிருஷ்ணமூர்த்தி பஞ்சாங்கத்தின் படி வெள்ளிக்கிழமை நவம்பர் 20, 2020 00:21 AM இந்திய நேரப்படி தனுசு (Sagittarius Rasi) ராசியில் இருந்து மகர (Capricorn Rasi) ராசிக்கு இடப்பெயர்ச்சி நடக்கிறது. குரு பகவான் ஏப்ரல் 5, 2020 12:௦6 AM திங்கட்கிழமை வரை மகர (Capircorn Rasi) ராசியில் சஞ்சரிக்கிறார்.


குரு பெயர்ச்சி / (Guru Peyarchi) லஹிரி பஞ்சாங்கத்தின் படி வெள்ளிக்கிழமை நவம்பர் 20, 202௦ ௦1:2௦ AM இந்திய நேரப்படி தனுசு (Sagittarius Rasi) ராசியில் இருந்து மகர (Capricorn Rasi) ராசிக்கு இடப்பெயர்ச்சி நடக்கிறது. குரு பகவான் ஏப்ரல் 5, 2021 12:25 AM செவ்வாய்க்கிழமை வரை மகர (Capricorn Rasi) ராசியில் சஞ்சரிக்கிறார்.


குரு பெயர்ச்சி / (Guru Peyarchi) வாக்கிய பஞ்சாங்கத்தின் படி ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 15, 202௦ இந்திய நேரப்படி தனுசு (Sagittarius Rasi) ராசியில் இருந்து மகர (Capricorn Rasi) ராசிக்கு இடப்பெயர்ச்சி நடக்கிறது. குரு பகவான் ஏப்ரல் 6, 2021 வரை மகர (Capricorn Rasi) ராசியில் சஞ்சரிக்கிறார்.


எப்போதும் திரு கணித பஞ்சாங்கம், லஹிரி பஞ்சாங்கம், கேபி பஞ்சாங்கம் மற்றும் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சிறிது நேரம் வித்தியாசம் இருக்கும். ஆனால் நான் எப்போதும் கேபி (கிருஷ்ணமூர்த்தி) பஞ்சாங்கத்தின் படி குரு பெயர்ச்சி கணிப்புகளை எழுதியுள்ளேன் - KT ஜோதிடர்.

சிறப்பு குறிப்பு:
நீங்கள் இந்த குரு பெயர்ச்சி என் 4½ மாத காலத்திற்கு மட்டுமே மகர ராசியில் நடைபெறுகிறது என்று நினைக்கலாம்.
அதற்கு காரணம், குரு மார்ச் 30, 2020 முதல் ஜூன் 30, 2020 வரையிலான மூன்று மாத காலத்திற்கு தனுசு ராசி பெயர்ச்சியின் ஒரு பாகமாக முன்பே மகர ராசியில் சஞ்சரித்து விட்டார்.
செப்டம்பர் 15, 2021 முதல் நவம்பர் 19, 2021 வரையிலான காலகட்டத்தில் இரண்டு மாத காலத்திற்கு கும்ப ராசி பெயர்ச்சியின் ஒரு பாகமாக சஞ்சரிப்பார்.
அதனால் குரு கும்ப ராசிக்கு ஏப்ரல் 5, 2021 அன்று பெயருவது ஒரு இயல்பான பெயர்சியாகவே இருக்கும்.



இந்த குரு பெயர்ச்சி காலகட்டம் முழுவதும் சனி பகவான் மகர ராசியிலேயே சஞ்சரிப்பார். அதே நேரத்தில் ராகு ரிஷப ராசியிலும், கேது விருச்சிக ராசியிலும் சஞ்சரிப்பார்.
மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம் மற்றும் கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி காலம் சற்று கடினமான நேரம் நிறைந்ததாகவே இருக்கும்.
ரிஷபம், கடகம், கன்னி, தனுசு, மற்றும் மீன ராசியில் பிறந்தவர்கள் மகிழ்ச்சி தரும்படியான நல்ல பலன்களைப் பெறுவார்கள்.



Prev Topic

Next Topic





Disclaimer: This web site is for educational and informational purposes only.

Content copyright 2010-2023. Betelgeuse LLC. All rights reserved.