2021 February பிப்ரவரி மாத ராசி பலன்கள் Rasi Palangal by KT ஜோதிடர் | |
முகப்பு | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
2021 பெப்ரவரி மாத பலன்கள்
• பெப்ரவரி 27, 2021 அன்று சுக்கிரன் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயருகிறார்
• சூரியன் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெப்ரவரி 12, 2021 அன்று பெயருகிறார்
• ஜனவரி 3௦, 2021 அன்று மகர ராசியில் வக்கிர கதி அடைந்த புதன், தனது வக்கிர கதி காலத்தை பெப்ரவரி 21, 2021 அன்று முடிப்பார். புதன் இந்த மாதம் முழுவதும் மகர ராசியில் சஞ்சரிப்பார்
• பெப்ரவரி 21, 2021 வரை செவ்வாய் மேஷ ராசியில் சஞ்சரித்து அதன் பின்னர் ரிஷப ராசிக்கு பெயருவார்
• ராகு ரிஷப ராசியிலும், கேது விருச்சிக ராசியிலும் இந்த மாதம் முழுவதும் சஞ்சரிப்பார்கள்
ஜனவரி 14 மற்றும் 15, 2021 அன்று நடந்த 5 கிரகங்களின் மிகப்பெரிய சஞ்சாரம் பல மாற்றங்களை அரசியல், சமூகம், மற்றும் பொருளாதாரம் குறித்த விடயங்களில் உண்டாக்கி இருந்திருக்கும். மேலும் விடயங்களை மோசமாக்கும் விதமாக, 6 கிரகங்களான – சூரியன், சந்திரன், சுக்கிரன், புதன், குரு மற்றும் சனி பகவான் பெப்ரவரி 11, 2021 மற்றும் பெப்ரவரி 12, 2021 அன்று மகர ராசியில் இணைகிறார்கள். இதனால் பெப்ரவரி 2021 மாதமும் அதிக சவால்களை நாம் சந்திக்க நேரலாம்.
சூரியன் மற்றும் சந்திரன் மகர ராசியை விட்டு பெப்ரவரி 14, 2021 அன்று வெளியே வந்ததும், இந்த மிகப் பெரிய சஞ்சாரம் முற்றிலுமாக முடிவுக்கு வரும். இந்த காலகட்டத்தில் கோவிட் -19 மற்றும் புதிய வைரசின் தாக்கம் உச்சத்தில் இருக்கும், அதன் பின்னர் குறையத் தொடங்கும். குரு செவ்வாயை பெப்ரவரி 21, 2021 அன்று ஐந்தாம் பார்வையாய் பார்வை இடுவதால் மிகச் சிறப்பான பலனாக குரு மங்கள யோகம் உண்டாகும். இந்த சஞ்சாரம் கோவிட்-19-ன் தாக்கத்தை மிகப் பெரிய அளவு கட்டுப்படுத்தும்.
Prev Topic
Next Topic
Content copyright 2010-2023. Betelgeuse LLC. All rights reserved.