2021 September செப்டம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal by KT ஜோதிடர்

கண்ணோட்டம்


2021 செப்டம்பர் மாத பொதுப் பலன்கள்
சூரியன் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு செப்டம்பர் 17, 2021 அன்று பெயருகிறார். செவ்வாய் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு செப்டம்பர் 6, 2021 அன்று பெயருகிறார். புதன் கன்னி ராசியில் சஞ்சரித்து, செப்டம்பர் 22, 2021 அன்று துலாம் ராசிக்குப் பெயர்ந்து செப்டம்பர் 27, 2021 அன்று வக்கிர கதி அடைவார். சுக்கிரன் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு செப்டம்பர் 6, 2021 அன்று பெயர்ந்து, துலாம் ராசியிலேயே இந்த மாதத்தின் மீதமுள்ள நாட்கள் சஞ்சரிப்பார். ராகு ரிஷப ராசியிலும், கேது விருச்சிக ராசியிலும் இந்த மாதம் முழுவதும் சஞ்சரிப்பார்கள்

வக்கிர கதி அடைந்த குரு மீண்டும் மகர ராசிக்கு செப்டம்பர் 15, 2021 அன்று பெயருவார். சனிபகவான் ஏற்கனவே மகர ராசியில் வக்கிர கதி அடைந்த நிலையில் உள்ளார். சனி பகவானும், குருவும் இணைந்து செப்டம்பர் 15, 2021 முதல் நீச்ச பங்க ராஜ யோகத்தை உண்டாக்குகிறார்கள்.
முக்கிய கிரகங்கள் தங்கள் ராசி மற்றும் திசைகளை இந்த குறிப்பிட்ட நாட்களில் மாற்ற உள்ளார்கள், அவை; செப்டம்பர் 6, 2021, செப்டம்பர் 15, 2021 மற்றும் செப்டம்பர் 27, 2021 ஆகும். ஒவ்வொரு ராசிக்காரருக்கும் இந்த கிரகங்களின் இடமாற்றம் எவ்வாறு பலனளிக்கப் போகிறது என்பதை நாம் காண்போம்.

Prev Topic

Next Topic





Disclaimer: This web site is for educational and informational purposes only.

Content copyright 2010-2023. Betelgeuse LLC. All rights reserved.