2021 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - KT ஜோதிடர்

கண்ணோட்டம்


2021 புத்தாண்டு வாழ்த்துக்கள்!

உலகம் முழுவதும் இந்த ஆண்டு புஷ்யமி (பூச) நட்சத்திரத்தில் பிறக்கிறது. இந்த நட்சத்திரம் சனி பகவானால் ஆளப்படுகிறது. தற்போது சனி பகவான் தன்னுடைய சொந்த வீடான மகர ராசியில் சஞ்சரித்து பலவீனமான குருவுடன் இணைந்து நீச்ச பங்க ராஜ யோகத்தை உண்டாக்குகிறார். சனி பகவான் இந்த ஆண்டு முழுவதும் மகர ராசியில் சஞ்சரிப்பார். ஆனால் குரு மீண்டும் மகர ராசி மற்றும் கும்ப ராசிக்கும் இடையில் சஞ்சரிப்பார்.

ஏப்ரல் 5, 2021 வரை குரு மகர ராசியில் சஞ்சரிப்பார். அதன் பின்னர் கும்ப ராசிக்கு பெயருவார். அதன் பின்னர் குருகும்ப ராசியில் வக்கிர கதி அடைந்து மீண்டும் செப்டம்பர் 15, 2021 கன்று மகர ராசிக்கு பெயருவார். குரு மகர ராசியில் வக்கிர நிவர்த்தி அடைந்து கும்ப ராசிக்கு மீனும் நவம்பர் 2.௦, 2021 அன்று பெயருவார்.

இந்த புதிய ஆண்டின் முக்கியமான கிரகங்களில் சஞ்சாரங்கள்:

• ராகு ரிஷப ராசியிலும், கேது விருச்சிக ராசியிலும் இந்த ஆண்டு முழுவதும் சஞ்சரிப்பார்கள்
• செவ்வாய் இந்த 2021 ஆண்டு முழுவதும் வக்கிர கதி அடைய மாட்டார்
• சுக்கிரன் டிசம்பர் 19, 2021 இந்த ஆண்டின் இறுதி வாக்கில் வக்கிர கதி அடைவார்
• குரு மற்றும் சனி பகவான் இணைந்து மகர ராசியில் ஜனவரி ௦1, 2021 முதல் ஏப்ரல் 5, 2021 வரையிலான காலகட்டத்தில் சஞ்சரிப்பார்கள், அதன் பின்னர் மீண்டும் செப்டம்பர் 15, 2021 முதல் நவம்பர் 2௦, 2021 வரையில் சஞ்சரிப்பார்கள். ஆனால் சரியான இணைந்த சஞ்சாராம் கடந்த ஆண்டே டிசம்பர் 21, 202௦ அன்று நடந்து விட்டது
• பெப்ரவரி 21, 2021 முதல் ஜூன் ௦1, 2021 வரையிலான காலகட்டத்தில் குரு மங்கள யோகம் உண்டாகும்
ராசிகளுக்கிடையே குரு பெயருவதும், திசைகளை மாற்றுவதும் எப்போதும் அதிர்ஷ்டத்தில் மாற்றங்களை மேலும் கீழுமாக மாற்றிக் கொண்டே இருக்கும். நான் ஒவ்வொரு ராசிக்கும் 4 பாகங்களாக குரு மகர ராசி மற்றும் கும்ப ராசியில் சஞ்சரிப்பதன் அடிப்படையில் கணித்துள்ளேன்.
முதல் பாகம் ஜனவரி ௦1, 2021 முதல் ஏப்ரல் 5, 2021 வரையில் இருக்கும். இரண்டாம் பாகம் ஏப்ரல் 5, 2021 முதல் செப்டம்பர் 14, 2021 வரை இருக்கும். மூன்றான் பாகம் செப்டம்பர் 14 முதல் நவம்பர் 2௦, 2021 வரை இருக்கும். நான்காம் பாகம் நவம்பர் 2௦, 2021 முதல் டிசம்பர் 21, 2021 வரை இருக்கும்.

Prev Topic

Next Topic





Disclaimer: This web site is for educational and informational purposes only.

Content copyright 2010-2023. Betelgeuse LLC. All rights reserved.