2022 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - KT ஜோதிடர்

கண்ணோட்டம்


2022 புத்தாண்டு கணிப்புகள் . இந்த 2022 புத்தாண்டு புதனின் ஆதிக்கம் பெற்ற ஜ்யேஷ்தா (கேட்டை) நட்சத்திரத்தில் தொடங்குகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் சுக்கிரன் வக்கிர கதி அடைந்த நிலையில் உள்ளார். இந்த 2022 ஆம் ஆண்டு சனி பகவான் மகர ராசியில் இருந்தாலும், ஏப்ரல் 3௦, 2022 முதல் ஜூலை 14, 2022 வரையிலான காலகட்டத்தில் கும்ப ராசிக்கு அதி சரமாய் பெயர்ச்சி ஆகிறார். குரு ஏப்ரல் 14, 2022 அன்று கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகி இந்த ஆண்டின் மீதமுள்ள மாதங்கள் அங்கேயே சஞ்சரிப்பார்.

ராகு ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கும் மற்றும் கேது விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும் ஏப்ரல் 14, 2022 அன்று பெயர்ச்சி ஆகிறார்கள். இதே நாளில் தான் குருவும் கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ராகு, கேது மற்றும் குரு ஆகிய மூன்று கிரகங்களும் ஒரே நாளில் ஏப்ரல் 14, 2022 அன்று பெயர்ச்சி ஆகும் நேரத்தில் சூரியன் உச்சம் பெறுவதால் ஏப்ரல் 14, 2022 முதல் அனைவரது அதிர்ஷ்டத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும்.

ஜூலை 28, 2022 முதல் நவம்பர் 26, 2022 வரையிலான காலகட்டத்தில் குரு வக்கிர கதி அடைகிறார். சனி பகவான் ஜூன் 4, 2022 அன்று கும்ப ராசியில் வக்கிர கதி அடைந்து, அக்டோபர் 23, 2022 அன்று மகர ராசியில் வக்கிர நிவர்த்தி ஆகிறார்.

நான் இந்த புத்தாண்டு பெயர்ச்சி கணிப்புகளை ஒவ்வொரு ராசிக்கும் நான்கு பாகங்களாக பிரித்து கணித்துள்ளேன்.

முதல் பாகம்: ஜனவரி ௦1, 2022 முதல் ஏப்ரல் 14, 2022 வரை
இரண்டாம் பாகம்: ஏப்ரல் 14, 2022 முதல் ஜூலை 28, 2022 வரை (சனி பகவான் ஜூன் 4, 2022 அன்று வக்கிர கதி அடைகிறார்)
மூன்றாம் பாகம்: ஜூலை 28, 2022 முதல் அக்டோபர் 23, 2022 வரை
நான்காம் பாகம்: அக்டோபர் 23, 2022 முதல் டிசம்பர் 31, 2022 வரை (குரு நவம்பர் 26, 2022 அன்று வக்கிர நிவர்த்தி ஆகிறார்)

Prev Topic

Next Topic





Disclaimer: This web site is for educational and informational purposes only.

Content copyright 2010-2023. Betelgeuse LLC. All rights reserved.