2018 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - KT ஜோதிடர்

கண்ணோட்டம்

இந்த ஆண்டு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூர் நாடுகளில் மிருகசிரிஷம் (மிருகசிர்ஷா) நட்சத்திரம் ரிஷப ராசியில் தொடங்குகிறது. மற்ற நாடுகளில் மிருகசிரிஷம் (மிருகசிர்ஷா) நட்சத்திரம் மிதுன ராசியில் தொடங்குகிறது.
இந்த மிருகசிரிஷம் நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய். 2018 ஆம் ஆண்டில் "18" என்ற எண்ணின் கூட்டுத்தொகை 9. எண் 9-ன் அதிபதி செவ்வாய்.
செவ்வாய் மகர ராசியில் வக்கிரம் பெற்று செல்வதால், சுமார் 188 நாட்களுக்கு (மே 2, 2018 மற்றும் நவம்பர் 06, 2018 வரை) மகர ராசியில் சஞ்சாரம் செய்கின்றார்.

ஜூன் 27, 2018 அன்று மகர ராசியில் 15 டிகிரி மற்றும் 11 நிமிடங்களில் செவ்வாய் வக்கிரம் அடைகிறது. ஆகஸ்ட் 27, 2018 அன்று மகர ராசியில் 4 டிகிரி மற்றும் 35 நிமிடங்களில் செவ்வாய் கிரகத்தில் வக்ரு நிவர்த்தி அடைகிறது.
செவ்வாய் சனி யின் சேர்க்கை இல்லாது இருப்பினும், செவ்வாய் மற்றும் கேது சந்திப்பு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
2018 ம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியிலும், ராகு கடக ராசியிலும், கேது மகர ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றன.
குரு பகவான் துலாம் ராசியில் இருந்து அக்டோபர் 11, 2018 ஆம் தேதி விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி ஆகின்றார்.
செவ்வாய் கேது சேர்க்கையின் விளைவுகள்
வியாழன், சனி, ராகு, கேது வாழ்க்கை நிகழ்வுகளுக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.
செவ்வாய் 6 மாதங்கள் கேதுவுடன் சேர்ந்து மகர ராசியில் சஞ்சாரம் செய்வது பின்வரும் விளைவுகளை ஏற்படுத்தும்:
1. பங்குச் சந்தை
2018 ஆம் ஆண்டில் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது நல்லது அல்ல.
செவ்வாயின் தாக்கம் 2018 ஆம் ஆண்டில் அதிகமாக இருப்பதால், பங்குச் சந்தை நிலவரம் கவலைக்கிடமாகவே இருக்கும்.
2. ரியல் எஸ்டேட் விலை திருத்தம்
ரியல் எஸ்டேட் விலைகளில் 2018 ஆம் ஆண்டில் ஆழமான திருத்தம் (correction) ஏற்படும். ரியல் எஸ்டேட் சந்தையில் குறைந்த விலையைப் பெற நவம்பர் 2018 வரை நீங்கள் காத்திருக்கலாம். ரியல் எஸ்டேட் விலைகள் அதிகரித்த நகரங்களில் / பகுதிகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
3. புதிய நோய்கள் / விபத்துக்கள்
செவ்வாய் மற்றும் கேது சந்திப்புடன் பெரிய விபத்துக்கள் சாத்தியமாகும். புதிய நோய்களால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பயணங்களும் பாதிக்கம் அடையும்.
4. இயற்கை பேரழிவு
இயற்கை பேரழிவு பின்வரும் தேதிகளில் நடப்பதற்கான சாத்தியகூறுகள் உள்ளன:
ஏப்ரல் 1, 2018
செப்டம்பர் 4, 2018
செப்டம்பர் 11, 2018
செப்டம்பர் 18, 2018 முதல் செப்டம்பர் 22, 2018 வரை
5. போர் / மனிதனால் ஏற்படும் பேரழிவு
அரசியல் கட்சிகள் மற்றும் நாடுகளில் இடையே மோதல்கள் இருக்கும். செவ்வாயுடன் கேது இணைவதன் மூலம் இது 2018 ஆம் ஆண்டு (ஜூன் மற்றும் செப்டம்பர் 2018 மதங்களில்) போர்கள் நடப்பதற்கான சாத்தியகூறுகள் உள்ளன.
செவ்வாய் - சனி சேர்க்கை: ஏப்ரல் 3, 2018 .
செவ்வாய் - கேது சேர்க்கை: 2018 ஆம் ஆண்டில் 3 முறை நடக்கிறது.
ஜூன் 14, 2018,
ஜூலை 18, 2018 மற்றும்
செப் 22, 2018
முதலீடுகள்
பங்கு விலைகள் / ரியல் எஸ்டேட் சந்தையில் ஏற்படும் திருத்தம், இந்த ஆண்டின் இறுதியில் நடுத்தர வர்க்க மக்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்குமாறு உதவும்.
மருத்துவமனைகள் மற்றும் டாக்டர்களுக்கான அதிக தேவை இருக்கும். மருந்து நிறுவனங்கள் விற்பனை செய்வதில் மிகவும் சிறப்பாக செயல்படுகின்றன. ஆனால் சுகாதார காப்பீடு நிறுவனம் பல கோரிக்கைகளுடன் நஷ்டம் அடையலாம்.
2018 ஆம் ஆண்டில் கும்ப ராசி, துலா, மிதுன ராசி (ஜெமினி) ஆகியோரில் பிறந்தவர்கள், நல்ல யோகங்களை அனுபவிப்பார்கள். இந்த ஆண்டு 2018 எப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கப் போகிறது என்பதைப் பற்றிய விரிவான கணிப்புகளைப் படிக்க உங்கள் ராசியை தேர்ந்தெடுங்கள்.
செவ்வாய், ராகு, கேது அல்லது சனி மஹா திசை நடப்பவர்கள் தங்களது சுய ஜாதகத்தின் வலிமையை அறிந்த பின், முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும்.


Meena Rasi (மீன ராசி)

Mesha Rasi (மேஷ ராசி)

Rishaba Rasi (ரிஷப ராசி)

Midhuna Rasi (மிதுன ராசி)

Kumbha Rasi (கும்ப ராசி)

Kataga Rasi (கடக ராசி)

Makara Rasi (மகர ராசி)

Simma Rasi (சிம்ம ராசி)

Dhanushu Rasi (தனுசு ராசி)

Vrishchik Rasi (விருச்சிக ராசி)

Thula Rasi (துலா ராசி)

Kanni Rasi (கன்னி ராசி)

Explore KTAstro.comDisclaimer: This web site is for educational and informational purposes only. Click here to read the Disclaimer.

Content copyright 2010-2017. Betelgeuse LLC. All rights reserved.