2019 புத்தாண்டு ராசி பலன்கள் Rasi Palangal - KT ஜோதிடர்

கண்ணோட்டம்

இந்த புது வருடம் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூ ஜிலாந்து, சிங்கபூர் மற்றும் துபாய் நாடுகளில் வசிப்பவர்களுக்கு சுவாதி நட்சத்திரம் துலாம் ராசியில் பிறக்கின்றது. மற்ற மேலை நாடுகளில் வசிப்பவர்களுக்கு விசாக நட்ச்சத்திரம் துலாம் ராசியில் புத்தாண்டு பிறக்கின்றது.
ராகு கடக ராசியில் மார்ச் 09, 2019 வரை சஞ்சரித்து அதன் பின் மிதுன ராசியில் சஞ்சரிப்பார். அதே போன்று கேது மகர ராசியில் இருந்து, தனுசு ராசிக்கு இடம் மாறுகிறார். சனி பகவான் தனுசு ராசியில் இந்த 2019 வருடம் முழுவதும் சஞ்சரிப்பார். சனி பகவான் மற்றும் கேது இணைந்து மார்ச் 09, 2019 முதல் இந்த வருடம் முழுவதும் சஞ்சரிப்பது, சில பாதிப்புகளை ஏற்படுத்த கூடும்.
குரு விருச்சிக ராசியில் மார்ச் 27, 2019 வரை சஞ்சரிப்பார். அதன் பின் தனுசு ராசிக்கு அதி சாரமாக பெயர்ச்சியாகி, வக்கிர கதி அடைந்து மீண்டும் விருச்சிக ராசிக்கு ஏப்ரல் 25, 2019 அன்று வந்து விடுகிறார். குரு ஆகஸ்ட் 11, 2019 அன்று வக்கிர நிவர்த்தி அடைந்து, பின் தனுசு ராசிக்கு நவம்பர் ௦4, 2019 அன்று இடப்பெயர்ச்சி ஆகிறார்.
இந்த வருடம் 2019ல் குரு, சனி பகவான் மற்றும் கேது இணைந்து இரு முறை சஞ்சரிக்கின்றனர். மார்ச் 28, 2019 முதல் ஏப்ரல் 24, 2019 வரை மற்றும் நவம்பர் 04, 2019 முதல் டிசம்பர் 31, 2019 வரை. இந்த சந்திப்பு ஏற்படும் போது குரு மற்றும் சனி பகவான், மிதுன ராசியில் உள்ள ராகுவை பார்வை இடுகிறார்கள்.
சனி பகவான் மற்றும் கேதுவுடன் இணைந்து செப்டம்பர் 15, 2019 அன்று இணைந்து ஒரே நேர் கோட்டில் சஞ்சரிப்பார்கள்.
மார்ச் 15, 2019 முதல் மே 15, 2019 வரையிலான காலகட்டத்தில், வாழ்க்கையில் பல எதிர் பாராத மாற்றங்கள் ஏற்படக் கூடும். நீங்கள் பங்கு சந்தை வர்த்தகத்தில் இருந்தால் லாபமோ நட்டமோ, அது அதீதமாகவே இருக்கும். நீங்கள் உங்களது பிறந்த சாதக பலனை பார்த்தே எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் இந்த காலகட்டத்தில் எடுக்க வேண்டும்.
இந்த இரண்டு மாத காலகட்டத்தில், அதாவது மார்ச் 15, 2019 முதல் மே 15, 2019 வரை வீடு விலை அதிகமாக குறையக் கூடும். அதன் பின் ரியல் எஸ்டேட் சந்தையில் பெரிய மாற்றங்கள் இருக்காது. எனினும் வீட்டு மதிப்பு அதிகமாவது, பெப்ரவரி 2௦2௦க்கு மேல் தான் ஏற்படும், அதாவது சனி பகவான் மகர ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆன பின் அத்தகைய மாற்றங்கள் ஏற்படும். மொத்தத்தில் இந்த வருடத்தின் இரண்டாம் பகுதியில் அதாவது ஜூன் முதல் டிசம்பர் 2019 வரையிலான காலகட்டத்தில், வீடு அல்லது நிலம் வாங்க, முதலீடு செய்ய ஏற்ற காலகட்டமாக இருக்கும்.
2019 கிரகங்களின் நட்சத்திர சஞ்சாரம்
குரு கேட்டை நட்சத்திரத்தில்: ஜனவரி 01, 2019 3:03 AM முதல் மார்ச் 27, 2019 11:44 AM வரை [விருச்சிக ராசி]
குரு மூல நட்சத்திரத்தில்: மார்ச் 27, 2019 11:44 AM முதல் ஏப்ரல் 10, 2019 10:31 PM வரை [தனுசு ராசி]
குரு Rx மூல நட்த்திரத்தில்: ஏப்ரல் 10, 2019 10:31 PM முதல் ஏப்ரல் 25 2019 9:53 AM வரை [தனுசு ராசி]
குரு Rx கேட்டை நட்சத்திரத்தில்: ஏப்ரல் 25 2019 9:53 AM முதல் ஆகஸ்ட் 11 2019 7:08 PM வரை [விருச்சிக ராசி]
குரு கேட்டை நட்சத்திரத்தில்: ஆகஸ்ட் 11 2019 7:08 PM முதல் நவம்பர் 4, 2019 5:29 PM வரை [விருச்சிக ராசி]
குரு மூல நட்சத்திரத்தில்: Nov 4, 2019 5:29 PM முதல் டிசம்பர் 31, 2019 11:59 PM வரை [தனுசு ராசி]
சனி பகவான் பூராட நட்சத்திரத்தில்: ஜனவரி 01, 2019 முதல் ஏப்ரல் 29, 2019 வரை
சனி பகவான் Rx பூராட நட்சத்திரத்தில்: ஏப்ரல் 29, 2019 முதல் செப்டம்பர் 17, 2019 வரை
சனி பகவான் பூராட நட்சத்திரத்தில்: செப்டம்பர் 17, 2019 முதல் டிசம்பர் 26, 2019 வரை
சனி பகவான் உத்திராடம் நட்சத்திரத்தில்: டிசம்பர் 26, 2019 முதல் டிசம்பர் 31, 2019 வரை
ராகு பூச நட்சத்திரம் கடக ராசியில்: ஜனவரி 1, 2019 முதல் ஜனவரி 4, 2019 வரை
ராகு புனர்பூச நட்சத்திரம் கடக ராசியில்: ஜனவரி 04 2019 முதல் மார்ச் 09 2019 வரை
ராகு புனர்பூச நட்சத்திரம் மிதுன ராசியில்: மார்ச் 09 2019 முதல் செப்டம்பர் 12 2019 வரை
ராகு திருவாதிரை நட்சத்திரம் மிதுன ராசியில்: செப்டம்பர் 12 2019 முதல் டிசம்பர் 31 2019 வரை
கேது உத்திராட நட்சத்திரம் மகர ராசியில்: ஜனவரி 1 2019 முதல் மார்ச் ௦9, 2019 வரை
கேது உத்திராட நட்சத்திரம் தனுசு ராசியில்: மார்ச் ௦9, 2019 முதல் மே ௦9, 2019 வரை
கேது பூராட நட்சத்திரம் தனுசு ராசியில்: மே ௦9, 2019 முதல் டிசம்பர் 31, 2019 வரை

God bless you!
Written by கே. டி. ஜோதிடர் (KT Astrologer)
WhatsApp +1-510-470-4161


Meena Rasi (மீன ராசி)

Mesha Rasi (மேஷ ராசி)

Rishaba Rasi (ரிஷப ராசி)

Midhuna Rasi (மிதுன ராசி)

Kumbha Rasi (கும்ப ராசி)

Kataga Rasi (கடக ராசி)

Makara Rasi (மகர ராசி)

Simma Rasi (சிம்ம ராசி)

Dhanushu Rasi (தனுசு ராசி)

Vrishchik Rasi (விருச்சிக ராசி)

Thula Rasi (துலா ராசி)

Kanni Rasi (கன்னி ராசி)

Explore KTAstro.com



Disclaimer: This web site is for educational and informational purposes only. Click here to read the Disclaimer.

Content copyright 2010-2017. Betelgeuse LLC. All rights reserved.