2021 April ஏப்ரல் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Mesha Rasi (மேஷ ராசி)

கண்ணோட்டம்


ஏப்ரல் 2021 மேஷ ராசி பலன்கள்
சூரியன் உங்கள் ராசியின் 12 மற்றும் 1ஆம் வீட்டிற்கு பெயருவதால், இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு சாதகமற்ற நிலையியே இருக்கும். புதன் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் இருந்து 1ஆம் வீட்டிற்கு பெயருவதால் இந்த மாதம் முழுவதும் நீங்கள் நல்ல பலனை எதிர்பார்க்க முடியாது. சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசிக்கு ஏப்ரல் 1௦, 2021 அன்று பெயருவதால் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும்.


குரு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் அதிர்ஷ்டத்தை பல மடங்கு அதிகரிப்பார். செவ்வாய் ஏப்ரல் 14, 2021 அன்று மிதுன ராசிக்கு பெயர்ந்த பிறகு நீங்கள் நல்ல வளர்ச்சியையும், வெற்றியையும் பெறத் தொடங்குவீர்கள்.
சனி பகவான் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டிலும், கேது உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் உண்டாகும் பாதிப்புகள் முற்றிலுமாக குறையத் தொடங்கும். இந்த மாதத்தின் மத்தியில் ராகு உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரத் தொடங்குவார்.


ஏப்ரல் 5, 2021 முதல் நீங்கள் உங்கள் சோதனை காலத்தில் இருந்து வெளிவந்து விடுவீர்கள். இந்த மாதம் சற்று மந்தமாக உங்களுக்குத் தொடங்கினாலும், இந்த மாதத்தின் இறுதியில் நீங்கள் ஒரு நல்ல மகிழ்ச்சியான சூழலைப் பெறத் தொடங்குவீர்கள். மூச்சு பயிற்சி செய்து நேர்மறை சக்த்திகளை அதிகரித்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

Prev Topic

Next Topic