![]() | 2021 April ஏப்ரல் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
ஏப்ரல் 2021 துலாம் ராசி பலன்கள்
சூரியன் உங்கள் ராசியின் 6 மற்றும் 7ஆம் வீட்டிற்கு பெயருவதால் ஏப்ரல் 14, 2021 வரை உங்களுக்கு நல்ல பலன்கள் உண்டாகும் என்பதை நீங்கள் எதிர்பார்க்கலாம். புதன் உங்கள் ராசியின் 6 மற்றும் 7ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு கலவையான பலன்களைத் தருவார். ராகு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிலும், கேது உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் உங்களுக்கு தொடர்ந்து பிரச்சனைகள் ஏற்படக் கூடும். சுக்கிரனிடம் இருந்து இந்த மாதம் முழுவதும் உங்களால் நல்ல பலனை எதிர்பார்க்க முடியாது.
செவ்வாய் உங்கள் ராசியின் 9ஆம் வீட்டிற்கு ஏப்ரல் 14, 2021 வாக்கில் பெயருவதால் உங்கள் மன பதற்றம் குறையும். அர்தஷ்டம சனியின் தாக்கம் அதிகமாக உணரப்படும். ஆனால் குரு உங்கள் ராசியின் 5ஆம் வீடான பூர்வ புண்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து ஏப்ரல் 2021 முதல் உங்களுக்கு பாதுகாப்பை தருவார்.
குரு உங்கள் ஜென்ம ராசியை 7 ஆண்டுகளுக்கு பிறகு பார்வை இடுகிறார். இதனால் இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் நீங்கள் நல்ல மாற்றங்களை காணலாம். ஏப்ரல் 5, 2021 முதல் நீங்கள் உங்களுக்கு ஏற்பட்ட மோசமான சோதனை காலத்தில் இருந்து விரைவில் வெளியில் வருவீர்கள். கடந்த சமீப காலத்தில் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு நீங்கள் விரைவில் நல்ல நிவாரணத்தை காண்பீர்கள்.
கடந்த சில மாதங்களை விட இந்த மாதம் உங்களுக்கு சிறப்பாக உள்ளது. நீங்கள் மூச்சு பயிற்சி செய்து விரைவாக நேர்மறை சக்த்திகளைப் பெற முயற்சிக்கலாம்.
Prev Topic
Next Topic