2021 April ஏப்ரல் மாத நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal for Meena Rasi (மீன ராசி)

நிதி / பணம்


இது உங்களுக்கு மற்றுமொரு சிறப்பான மாதமாக இருக்கும். குறிப்பாக இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்கள் அதிக அதிர்ஷ்டம் நிறைந்ததாக உள்ளது. அதன் பின்னர் நீங்கள் அதிக பயணம் மற்றும் ஆடம்பர பொருட்கள் வாங்குவதற்காக செலவு செய்வீர்கள். உங்கள் வங்கிக் கடன் குறைந்த வட்டி விகிதத்திற்கு ஒப்புதல் பெரும். உங்கள் கடனை நிதி மறு பரிசீலனை செய்வதில் நீங்கள் வெற்றிப் பெறுவீர்கள். புது வீடு வாங்கி குடி பெயர இது நல்ல நேரம்.
செவ்வாய் நல்ல நிலைக்கு வருவதால், எந்த தேவையற்ற செலவுகளும் இருக்காது. உங்கள் சேமிப்பு கணக்கில் இருக்கும் பணம் வளர்ந்து கொண்டே போகும். உங்களுக்கு வரும் நாட்களில் எந்த கடன் பிரச்சனைகளும் இருக்காது. உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதால் நீங்கள் அதிக பாதுகாப்பாக இருப்பதாக உணருவீர்கள்.


உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் அடுத்த சில வாரங்களில் பணக்காராகும் வாய்ப்பும் உள்ளது. நீங்கள் சூதாட்டம் மற்றும் அதிர்ஷ்ட சீட்டு போன்றவற்றில் உங்கள் அதிர்ஷ்டத்தையும் முயற்சி செய்து பார்க்கலாம். சக்திவாய்ந்த குரு மங்கள யோகம் உண்டாவதன் பலத்தால் உங்களுக்கு ஏப்ரல் 1, 2021 முதல் ஏப்ரல் 5, 2021 வரை மற்றும் மீண்டும் ஏப்ரல் 14, 2021 முதல் 6 வாரங்களுக்கு விண்ணைத் தொடும் லாபம் உண்டாகும்.
சுதர்சன மகா மந்திரம் கேட்டு, பெருமாளை வணங்கி வந்தால், நிதி நிலையில் உங்கள் அத்ரிஷ்டம் அதிகரிக்கும். உங்களுக்கு கிடைக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு உங்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் செட்டிலாக முயற்சி செய்யுங்கள். உங்களால் முடிந்த தானம் மற்றும் தர்மங்களை செய்யவும் முயற்சி செய்யுங்கள்.


Prev Topic

Next Topic