2021 August ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kumbha Rasi (கும்ப ராசி)

கண்ணோட்டம்


ஆகஸ்ட் 2021 கும்ப ராசிப் பலன்கள்
சூரியன் உங்கள் ராசியின் 6 மற்றும் 7ஆம் வீட்டில் சஞ்சரித்து ஆகஸ்ட் 16, 2021 வரை நல்லப் பலனைத் தருவார். விரைவாக நகரும் புதன் உங்களுக்கு கலவையானப் பலனைத் தருவர். சுக்கிரன் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரித்து ஆகஸ்ட் 11, 2021 க்கு மேல் உங்களுக்கு நல்ல நிவாரணத்தை தருவார். செவ்வாய் உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் உடல் நலத்தை பாதிப்பதோடு, உங்களுக்கு பதற்றமான சூழ்நிலையையும் உண்டாக்கக் கூடும்.


ராகு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிலும், கேது உங்கள் ராசியின் 10ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் நீங்கள் நல்லப் பலனை எதிர்பார்க்க முடியாது. உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் வக்கிர கதி அடைந்த சனி பகவானும், ஜென்ம ஸ்தானத்தில் வக்கிர கதி அடைந்த குருவும், உங்கள் வளர்ச்சியை பாதிப்பார்கள். எதிர்பாராவிதமாக, இந்த மாதம் உங்களுக்கு கசப்பான அனுபவங்களை தரும் வகையில் எதிர்மறை சக்திகள் அதிகமாக இருக்கலாம்.
உங்களுக்கு தற்போது ஏழரை சனி காலம் தொடங்கியுள்ளதாலும், வரவிருக்கும் குரு பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பாக இல்லை என்பதாலும், நீங்கள் ஏப்ரல் 2022 வரை நீண்ட சோதனை காலத்தில் இருப்பீர்கள். அடுத்த 8 மாதங்களுக்கு நீங்கள் ரிஸ்க் எடுப்பதை தவிர்த்து விடுவது நல்லது.


Prev Topic

Next Topic