2021 August ஆகஸ்ட் மாத குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal for Mesha Rasi (மேஷ ராசி)

குடும்பம் மற்றும் உறவுகள்


இந்த மாதம் நாட்கள் நகர நகர உங்கள் குடும்ப சூழலில் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். ஆகஸ்ட் 19, 2021க்கு மேல் விடயங்கள் உங்கள் கட்டுப்பாட்டை மீறி போகக் கூடும். உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை கையாளும் போது நீங்கள் கோபப்படாமல், மிகவும் பொறுமையாக இருந்து செயல்பட வேண்டும். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்க மாட்டார்கள். நீங்கள் அவர்களுடன் நீண்ட வாக்குவாதம் செய்யக்கூடிய சூழல் ஏற்படலாம்.
உங்கள் வாழ்க்கைத்துணை மற்றும் உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க மாட்டார்கள். உங்கள் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நிச்சயிக்கும் விடயங்களில் சில பின்னடைவுகள் ஏற்படலாம். நவம்பர் 2021 வரை காத்திருந்து அதன் பின்னர் நீங்கள் முயற்சிகளை செய்வது நல்ல யோசனையாக இருக்கும். நீங்கள் புது வீட்டிற்கு குடி பெயர திட்டம் வைத்திருந்தாள், அதனை அடுத்த 6 வாரங்களுக்குப் பிறகு செய்யலாம்.


Prev Topic

Next Topic