2021 December டிசம்பர் மாத உடல் நலம் ராசி பலன்கள் Rasi Palangal for Mesha Rasi (மேஷ ராசி)

உடல் நலம்


செவ்வாய் மற்றும் கேது உங்கள் ராசியின் 8 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு அதிக பதற்றமும் மனக் கவலையும் ஏற்படலாம். உங்கள் கோபம் அதிகரிக்கும். டிசம்பர் 17, 2021 வாக்கில் உங்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படலாம். ஆனால் குரு நீங்கள் விரைவாக குணமடைய உதவுவதால், குறுகிய காலத்திற்கு மட்டுமே உங்களுக்கு உடல்நலக் குறை இருக்கும்.
உங்கள் மருத்துவ செலவுகள் குறைவாகவே இருக்கும். உங்கள் வாழ்க்கைத்துணை, குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும். அறுவைசிகிச்சை செய்துகொள்ள இது ஏற்ற நேரம் இல்லை. நீங்கள் அப்படியே அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்றாலும், அதனை செவ்வாய்க்கிழமைகளில் செய்வதை தவிர்த்து விடுவது நல்லது. மூச்சு பயிற்சி செய்து உங்கள் நேர்மறை சக்திகளை அதிகரித்துக் கொள்ளுங்கள். விஷ்ணு சஹாசார நாமம் கேட்க முயற்சி செய்யுங்கள்,


Prev Topic

Next Topic