2021 December டிசம்பர் மாத நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal for Dhanushu Rasi (தனுசு ராசி)

நிதி / பணம்


குரு உங்கள் ராசியின் 3 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்கள் நிதி நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்படலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், இந்த மாதம் நீங்கள் பெரும் அளவு பணத்தை இழக்க நேரலாம். உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு சூரிட்டி தருவதை தவிர்த்து விடுங்கள். கடந்த கால கடன்களால் நீங்கள் தேவை இல்லாமல் தற்போது சிக்க நேரலாம். நீங்கள் உங்கள் வீடு மற்றும் வாகன பராமரிபிற்காக அதிக செலவு செய்ய நேரலாம்.
இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் அதிக அவசர செலவுகள் ஏற்படலாம். உங்கள் வங்கிக் கடன் ஒப்புதல் பெறாமல் போகலாம். நீங்கள் தனி நபரிடம் கடன் வாங்கினால், அதிக வட்டி விகிதத்தால் ஏமாற்றப்படலாம். நீங்கள் கட்டிடம் கட்ட முன்பே பணத்தை முதலீடு செய்திருந்தால், தற்போது அது சார்ந்து கடினமான நேரம் உங்களுக்கு நிலவலாம். மேலும் உங்கள் புது வீட்டை பெரும் நாளும் அடுத்த 6 மாதங்களுக்கு தாமதமாகிக் கொண்டே போகலாம்.


எந்த நிதி சார்ந்த முடிவுகளாக இருந்தாலும், அதற்கு உங்கள் பிறந்த சாதக பலன் தேவை. டிசம்பர் 2௦, 2021 வாக்கில் உங்களுக்கு சாதகமற்ற செய்தி வரலாம். புது வீட்டிற்கு குடி பெயரும் முயற்சியை அடுத்த சில மாதங்களுக்கு தவிர்த்துவிடுங்கள்.
வரவிருக்கும் மாதங்களில் புது இடத்தில் நீங்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்க நேரலாம். பெருமாளை வணங்கி விஷ்ணு சஹாசார நாமம் கேட்பதால் உங்கள் பிரச்சனைகள் குறைந்து அதிர்ஷ்டம் அதிகரிக்கலாம்.


Prev Topic

Next Topic