![]() | 2021 February பிப்ரவரி மாத ராசி பலன்கள் Rasi Palangal for Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
பெப்ரவரி 2021 மகர ராசி பலன்கள்
சூரியன் உக்னால் ராசியின் 1 மற்றும் 2ஆம் வீட்டில் சஞ்சரிப்பது இந்த மாதம் முழுவதும் சிறப்பாக இல்லை. செவ்வாய் உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு பதற்றத்தை பெப்ரவரி 21, 2021 வரை உண்டாக்கக் கூடும். புதன் உங்கள் ஜென்ம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்களுக்கு மனக் கவலையை உண்டாக்கி, உங்கள் மனதை பாதிக்கக் கூடும். ராகு உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் குடும்ப சூழலில் உங்களுக்கு பிரச்சனைகளை உண்டாக்குவார்கள்.
உங்களுக்கு ஜென்ம சனி மற்றும் ஜென்ம குரு ஒரே நேரத்தில் நடைப் பெறுகிறது. இது ஒருவர் கடக்கக் கூடிய மோசமான கிரக அமைப்பாகும். பெப்ரவரி 8 – 11, 2021 மற்றும் பெப்ரவரி 18 – 28, 2021 வரையிலான காலகட்டத்தில் உங்களுக்கு சாதகமற்ற செய்திகள் வரலாம்.
உங்கள் வாழ்க்கையில் உங்களால் இனியும் எந்த தோல்விகளையும், ஏமாற்றங்களையும் ஏறக்க முடியாத நிலையில் இருப்பீர்கள். ஆனால் அடுத்த 9 வாரங்களுக்கு ஏப்ரல் 5, 2021 வரை உங்களுக்கு இந்த சோதனை காலம் இருக்கும். உங்கள் மகா தசை நடந்து கொண்டிருந்தாள், உங்களுக்கு மன உளைச்சலும் ஏற்படலாம். உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு நீங்கள் இந்த சோதனை காலத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும்.
Prev Topic
Next Topic