2021 February பிப்ரவரி மாத வழக்கு ராசி பலன்கள் Rasi Palangal for Vrishchik Rasi (விருச்சிக ராசி)

வழக்கு


குரு, புதன், ராகு மற்றும் கேது நல்ல நிலையில் சஞ்சரிக்கவில்லை. இதனால் நிலுவையில் இருக்கும் வழக்கில் அதிக தாமதங்களும், பிரச்சனைகளும் ஏற்படலாம். நீங்கள் நீதிமன்ற வழக்கை சந்திக்க வேண்டும் என்றால், அதனை 8 வாரங்களுக்கு, ஏப்ரல் 2021 வரை தாமதப்படுத்துவது நல்லது. சட்ட செலவுகள் சில மடங்கு அதிகரிக்கும். உங்கள் சொத்துக்கள் குறித்த பிரச்சனைகளுக்காக நீங்கள் பெப்ரவரி 21, 2021க்கு பிறகு நீதிமன்றம் செல்ல நேரலாம்.
வருமான வரி போன்ற நோட்டீஸ் வருவதால், தேக்கம் ஏற்பட்டு நீங்கள் பீதி அடையும் நிலையில் இருப்பீர்கள். உங்கள் பங்குதாரர் மற்றும் குடும்பத்தினர்களுடன் உங்களுக்கு சட்ட பிரச்சனைகள் ஏற்படலாம். நீங்கள் உங்கள் சொத்துக்களை பாதுகாத்துக் கொள்ள போதிய காப்பீடு எடுத்துக் கொள்வது நல்லது.


Prev Topic

Next Topic