![]() | 2021 February பிப்ரவரி மாத ராசி பலன்கள் Rasi Palangal for Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
பெப்ரவரி விருச்சிக ராசி பலன்கள்
சூரியன் உங்கள் ராசியின் 3 மற்றும் 4ஆம் வீட்டில் சஞ்சரித்து இந்த மாதத்தின் முதல் பாதியில் உங்களுக்கு நல்ல பலனைத் தருவார். சுக்கிரன் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக உள்ளது. உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் வக்கிர கதி அடையும் புதன் உங்கள் தொடர்பு குறித்த திறமைகளை பாதிக்கக் கூடும். ஜென்ம ராசியில் கேதுவும், களத்திற ஸ்தானத்தில் ராகுவும் சஞ்சரித்து உங்களுக்கு உறவுகள் குறித்த விடயங்களில் பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும்.
உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சரித்து நல்ல பலனை பெப்ரவரி 21, 2021 வரை தருவார். முக்கிய கிரகங்கள் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல பலனைத் தருவார்கள். ஆனால் செவ்வாய் குருவை கடினப் பார்வை பார்ப்பதால் உங்கள் பதற்றம் அதிகரிக்கும்.
மொத்தத்தில் நீங்கள் ஒரு மிதமான வளர்ச்சியை காண்பீர்கள் ஆனால் அதிக பிரச்சனைகளும், பதற்றமும் அதனுடன் சேர்ந்து வரும். அடுத்த 9 வாரங்களுக்கு முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்தால், அது சிறப்பாக இருக்கும். குரு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிற்கு ஏப்ரல் 5, 2021 முதல் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல பலனைத் தருவார்.
Prev Topic
Next Topic