2021 January ஜனவரி மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kataga Rasi (கடக ராசி)

கண்ணோட்டம்


ஜனவரி 2021 கடக ராசி பலன்கள்
சூரியன் உங்கள் ராசியின் 6 மற்றும் 7ஆம் வீட்டில் சஞ்சரித்து இந்த மாதம் உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார். விரைவாக நகரும் புதன் உங்களுக்கு இந்த மாதம் கலவையான பலன்களைத் தருவார். ராகு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து நிதி நிலையில் உங்கள் அதிர்ஷ்டத்தை அதிகரிப்பார். செவ்வாய் உங்கள் ராசியின் 9ஆம் வீட்டிலும், சுக்கிரன் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு தேவையற்ற பயம் மற்றும் பதற்றத்தை உண்டாக்குவார்கள். கேது உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு இந்த மாதம் கலவையான பலன்களைத் தருவார்.


சனி பகவான் மற்றும் குரு இணைந்து உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் நீச்ச பங்க ராஜ யோகத்தை உண்டாக்குகின்றார்கள். இதனால் உங்கள் அதிர்ஷ்டம் பல மடங்கு அதிகரிக்கும். உங்கள் நேர்மறை சக்தியின் அளவு இந்த மாதம் மிக அதிகமாக அதிகரிக்கும். நீங்கள் எதை செய்தாலும் அதில் பெரும் அளவு வெற்றிப் பெறுவீர்கள்.
உங்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், இந்த கண்டாக சனியில் இருந்து பெரும் அளவு நீங்கள் நிவாரணம் பெறுவீர்கள். நல்ல ஆரோக்கியம் பெற்று உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இந்த வாய்ப்புகளை பற்றிக் கொண்டு உங்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் செட்டிலாக முயற்சி செய்யுங்கள். மூச்சு பயிற்சி செய்து விரைவாக நேர்மறை சக்திகளைப் பெறுங்கள்.



Prev Topic

Next Topic