![]() | 2021 January ஜனவரி மாத வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal for Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | வேலை / உத்தியோகம் |
வேலை / உத்தியோகம்
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இது மற்றுமொரு சிறப்பான மாதமாக இருக்கும். நல்ல முன்னேற்றம் தரக்கூடிய ப்ரொஜெக்டில் வேலை பார்க்க வாய்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் அரசியல் இருக்காது. உங்கள் மேலாளர் மற்றும் உடன் வேலை பார்ப்பவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். நீண்ட காலமாக நீங்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்காக காத்திருந்தால், அது சில முயற்சிகள் எடுத்தாலே இந்த மாதம் உங்களுக்கு கிடைத்துவிடும். உங்கள் முதலாளியிடம் நீங்கள் உங்கள் உத்தியோகத்தில் முன்னேற்றம் குறித்து பேச இது நல்ல நேரம்.
எந்த சிக்கலும் இன்றி உங்கள் நிறுவனத்தில் இருந்து நீங்கள் குடியேற்ற பலன்கள், இடமாற்றம் மற்றும் இன்சூரன்ஸ் பலன்கள் போன்றவற்றைப் பெறுவீர்கள். புதிய வேலை காரணமாக உங்கள் நிறுவனம் மூலம் நீங்கள் வெளிநாட்டிற்கு இடமாற்றம் செய்வீர்கள். ஒப்பந்தம் ரீதியான உங்கள் உத்தியோகம் தற்போது முழுநேர உத்தியோகமாக மாறும் அல்லது ஒப்பந்தம் நீட்டிக்கப்படும்.
நீங்கள் உங்கள் உத்தியோகத்தை இழந்திருந்தால், சிறப்பான வேலை வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். தற்போது நீங்கள் பார்க்கும் உத்தியோகம் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் இல்லை என்றால், நீங்கள் வேறு வேலைக்கு முயற்சி செய்ய இது நல்ல நேரம். ஆனால் 12 வாரங்களுக்குள் நீங்கள் இதை செய்து விட வேண்டும். நீங்கள் உங்கள் உத்தியோகத்தை மாற்றும் போது, ஒரு நிலையான நிறுவனத்தில் சேருவதை உறுதி செய்ய வேண்டும். ஏப்ரல் 2021 முதல் உங்களுக்கு அஷ்டம குரு நடை பெற உள்ளதால், இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் உங்களுக்கு அதிக சவால்கள் உண்டாகும்.
Prev Topic
Next Topic