2021 January ஜனவரி மாத தொழில் மற்றும் இரண்டாம் வருமானம் ராசி பலன்கள் Rasi Palangal for Makara Rasi (மகர ராசி)

தொழில் மற்றும் இரண்டாம் வருமானம்


இந்த 2021 புத்தாண்டில் தொழிலதிபர்கள் பெரிதாக எந்த நிவாரணத்தையும் எதிர்பார்க்க முடியாது. உங்கள் மகா தசை சாதகமாக இல்லை என்றால், உங்களுக்கு பண பிரச்சனைகள் ஏற்படலாம். உங்களுக்கு கடன் கொடுத்தவரால் உங்கள் சொத்துக்கள் மிகக் குறைவான விலைக்கு அபகரிக்கப்படலாம். ஜனவரி 2021 மூன்றாம் வாரம் வாக்கில் உங்கள் வங்கி கணக்கு திவாலாகும் சூழல் ஏற்படலாம்.
வழக்குகளால் நீங்கள் பாதிக்கப்படலாம். எதிர்பாராவிதமாக, உங்கள் மீது தவறு இல்லை என்றாலும், நீங்கள் குற்றம் சாட்டப்படலாம். இதனால் உங்கள் நற்பெயரும் பாதிக்கக் கூடும். ஜென்ம சனி மற்றும் ஜென்ம குருவின் உண்மையான தாக்கத்தை நீங்கள் இந்த மாதம் உணருவீர்கள். உங்கள் கிரெடிட் மதிப்பு மற்றும் நிறுவனத்தின் பத்திரத்தின் மதிப்புகள் மிகவும் பாதிக்கக் கூடும்.


சுயத்தொழில் புரிவோர்கள் கடுமையான அழுத்தம் நிறைந்த சூழலில் வேலை புரிவார்கள். ஆனால் எந்த வருமானத்தையும் காண முடியாது. ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள் தங்களுக்கு கிடைக்க இருந்த கமிசனை இறுதி நேரத்தில் சதிகள் மற்றும் அரசியலால் இழக்க நேரலாம். கடவுள் வழிபாடு, சோதிடம் போன்றவற்றின் மதிப்பை நீங்கள் இந்த காலகட்டத்தில் புரிந்து கொள்வீர்கள்.


Prev Topic

Next Topic