![]() | 2021 January ஜனவரி மாத ராசி பலன்கள் Rasi Palangal for Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
ஜனவரி 2021 மிதுன ராசி பலன்கள்
சூரியன் உங்கள ராசியின் 7 மற்றும் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் இந்த மாதம் நல்ல பலனை எதிர்பார்க்க முடியாது. சுக்கிரன் உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் உறவுகளுடன் உங்களுக்கு பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும். புதன் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரித்து நல்ல பலனைத் தருவார். செவ்வாய் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு நல்ல உறுதுணையாக இருப்பார்.
ராகு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு கலவையான பலன்களைத் தருவார். கேது உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தருவார். சனி பகவான் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் வாழ்க்கையில் கசப்பான அனுபவங்களை உண்டாக்குவது உங்களுக்கு ஒரு பெரிய பின்னடைவாக இருக்கும். விடயங்களை மேலும் மோசமாக்கும் விதத்தில் குருவும் சனி பகவானோடு இணைந்து சஞ்சரிக்கின்றார். தற்போது உங்களுக்கு அஷ்டம சனி மற்றும் அஷ்டம குருவும் ஒரே நேரத்தில் நடை பெறுவதால் உங்கள் வாழ்க்கையில் இது ஒரு சவால் நிறைந்த காலகட்டமாக இருக்கும்.
ஜனவரி 23, 2021 வாக்கில் உங்களுக்கு எதிர்பாராத சாதகமற்ற செய்திகள் வரக்கூடும். நீங்கள் உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு அடுத்த 12 வாரங்கள் இருக்கும் இந்த சோதனை காலத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும்.
Prev Topic
Next Topic