2021 January ஜனவரி மாத நிதி / பணம் ராசி பலன்கள் Rasi Palangal for Simma Rasi (சிம்ம ராசி)

நிதி / பணம்


இந்த மாதம் உங்கள் நிதி நிலை மிகவும் பாதிக்கபப்டலாம். உங்கள் செலவுகள் விண்ணைத் தொடும் அளவு அதிகரிக்கும். உங்கள் சேமிப்பு கணக்கில் இருக்கும் பணம் விரைவாக கரையலாம். உங்கள் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகை அதிகரித்துக் கொண்டே போகும். அதிகரிக்கும் நிதி பிரச்சனைகள் உங்கள் நிம்மதியை எடுத்து விடக் கூடும். நீங்கள் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்தி, உங்கள் வங்கிக் கணக்கில் சேமிப்பை வைக்க முயற்சி செய்ய வேண்டும்.
ஆனால், விரைவாக உங்களால் நிதி பிரச்சனைகளில் இருந்து வெளி வர முடியும். சனி பகவான் மிகவும் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால், விடயங்கள் உங்கள் கட்டுப்பாட்டை விட்டு போகாமல் இருக்கும். யாருக்கும் பணம் கடன் கொடுப்பதையோ அல்லது கடன் வாங்குவதையோ முடிந்த வரை தவிர்த்து விடுவது நல்லது. ஜனவரி 21, 2021 வாக்கில் உங்கள் நண்பர்களால் அல்லது உறவினர்களால் நீங்கள் பண விடயங்களில் ஏமாற்றப்படலாம்.


நீங்கள் சொத்துக்களில் முதலீடு செய்திருந்தால், அதில் குடி இருப்பவர்களால் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படக் கூடும். அடுத்த 12 வாரங்களுக்கு ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளை தவிர்த்து விடுவது நல்லது. உங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வருகைத் தருவதால், அவர்களை உபசரிக்க நீங்கள் செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம்.


Prev Topic

Next Topic