2021 January ஜனவரி மாத வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal for Thula Rasi (துலா ராசி)

வேலை / உத்தியோகம்


சனி பகவான் மற்றும் செவ்வாய் தொடர்ந்து உங்களுக்கு அதிக வேலை பளு மற்றும் பதற்றத்தை உண்டாக்குவார்கள். உங்கள் உத்தியோக வாழ்க்கை பாதிக்கப்படும். இருப்பினும், குரு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரித்து சனி பகவானால் ஏற்படும் தாக்கத்தை குறைப்பார். அதனால், உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை உங்களால் வார இறுதியில் சற்று அதிக நேரம் ஒதுக்கி செய்து முடிக்க முடியும். குரு எந்த பிரச்சனையும் இல்லாமல் உங்கள் உத்தியோகத்தை பாதுகாத்துக் கொள்ள உதவுவார். ஆனால், பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்ற விடயங்களை இந்த மாதம் நீங்கள் எதிர்பார்த்தால், அதில் ஏமாற்றம் ஏற்படலாம்.
நீங்கள் ஒப்பந்தம் ரீதியாக வேலை பார்த்தால், உங்கள் ஒப்பந்தம் இந்த மாதம் மேலும் சில காலத்திற்கு நீட்டிக்கப்படலாம். ஆனால் முழு வேற வேலையாக மாற தற்போது வாய்புகள் குறைவே. இடமாற்றம், இன்சூரன்ஸ் அல்லது வெளிநாட்டு பயணம் போன்ற பலனைகளை நீங்கள் இப்போது எதிர்பார்த்தால், அதில் ஏமாற்றமே ஏற்படும்.


உங்கள் அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொண்டால், இது உங்களுக்கு ஒரு நல்ல மாதமாக இருக்கும். நீங்கள் உங்கள் நிறுவனத்தை விட்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படாதவரை புது வேலைக்கு முயற்சி செய்வதை தவிர்த்து விடுவது நல்லது. ஏப்ரல் 2021 முதல் குரு உங்கள் ராசியின் 5ஆம் வீடான பூர்வ புண்ய ஸ்தானத்திற்கு பெயர்ந்த பிறகு உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் வரும்.


Prev Topic

Next Topic