2021 January ஜனவரி மாத ராசி பலன்கள் Rasi Palangal for Dhanushu Rasi (தனுசு ராசி)

கண்ணோட்டம்


ஜனவரி 2021 தனுசு ராசி பலன்கள்
சூரியன் உங்கள் ராசியின் 1 மற்றும் 2ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு கலவையான பலன்களைத் தருவார். சுக்கிரன் உங்கள் ஜென்ம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தருவார். புதன் உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் சிந்திக்கும் மற்றும் பேசும் திறைமையை அதிகரிப்பார்.


ராகு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிலும், கேது 12ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு தொடர்ந்து சிறப்பான பலன்களைத் தருவார்கள். குரு மற்றும் சனி பகவான் இணைந்து உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரித்து நீச்ச பங்க ராஜ யோகத்தை தந்து, பண மழையை உங்களுக்கு தருவார்கள். செவ்வாய் உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு தேவையற்ற பயம் மற்றும் பதற்றத்தை உண்டாக்கக் கூடும். நீங்கள் உங்கள் தன்னம்பிக்கையின் அளவை அதிகரித்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
விடயங்கள் உங்களுக்கு சாதகமாக நகரத் தொடங்கும். நீங்கள் எதை செய்தாலும், அதில் பெரும் அளவு வெற்றிப் பெறுவீர்கள். மொத்தத்தில் இது உங்களுக்கு நல்ல முன்னேற்றம் தரக்கூடிய மற்றும் அதிர்ஷ்ட்டம் நிறைந்த சிறப்பான மாதமாக இருக்கும். நீங்கள் மூச்சு பயிற்சி செய்து, கடவுள் வழிபாடு செய்து உங்கள் தன்னம்பிக்கையின் அளவை அதிகரித்துக் கொள்ள வேண்டும்.


Prev Topic

Next Topic