2021 January ஜனவரி மாத வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal for Vrishchik Rasi (விருச்சிக ராசி)

வேலை / உத்தியோகம்


குரு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் வேலை பளுவை பல மடங்கு அதிகப்படுத்துவார். ஜனவரி 4, 2021 முதல் ஜனவரி 28, 2021 வரையிலான காலகட்டத்தில் அலுவலகத்தில் அரசியல் அதிகரிக்கும். உங்களுடன் வேலை பார்ப்பவர்கள் மற்றும் மேலாளருடன் உங்களுக்கு சண்டைகள் ஏற்படலாம். உங்களுக்கு புதிதாக வேலை கிடைத்தால், அல்லது சமீப சில மாதங்களில் பதவி உயர்வு கிடைத்திருந்தால், மறைமுக எதிரிகளால் உங்களுக்கு அதிக பிரச்சனைகள் ஏற்படலாம். இது குறிப்பாக சமீப நாட்களில் உங்களது விரைவான வளர்ச்சி மற்றும் வெற்றியைக் கண்டு பிறர் உங்கள் மீது பொறாமைப் படுவதால் ஏற்படும்.
உங்களுக்கு நல்ல செய்தி என்னவென்றால், சனி பகவான் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு பெரும் அளவு உதவிகளை செய்து அலுவலகத்தில் நடக்கும் அரசியலில் இருந்து பாதுகாப்பார். உங்களுக்கு ஏற்படும் அனைத்து தடைகளையும் நீங்கள் சமாளித்து உங்கள் ப்ரோஜெக்ட்டை சரியான நேரத்தில் முடிப்பீர்கள். ஆனால், நீங்கள் வெற்றிகரமாக முடிப்பது அவ்வளவு எளிது இல்லை. உங்களது கடின உழைப்பிற்கு ஏற்ற நிதி சன்மானங்கள் இந்த ஆண்டின் இரண்டாம் பகுதியில் உங்களுக்கு கிடைக்கும்.


அடுத்த 12 வாரங்களுக்கு நீங்கள் உங்களுக்கு ஏற்படும் கடினமான சூழ்நிலைகளை சமாளிக்க மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். விசா ஸ்டம்பிங் செய்வதை முடிந்த வரை தவிர்த்து விடுவது நல்லது. அது நீங்கள் எதிர்பார்த்த பலனைத் தராமல் போகலாம். ஏப்ரல் 2021 முதல் வாரம் வரை காத்திருந்து பின்னர் நீங்கள் வெளிநாட்டுப் பயணம் செய்ய முயற்சிக்கலாம்.


Prev Topic

Next Topic