2021 January ஜனவரி மாத ராசி பலன்கள் Rasi Palangal for Rishaba Rasi (ரிஷப ராசி)

கண்ணோட்டம்


ஜனவரி 2021 ரிஷப ராசி பலன்கள்
சூரியன் உங்கள் ராசியின் 8 மற்றும் 9ஆம் வீட்டில் இந்த மாதம் முழுவதும் சஞ்சரிப்பதால் சிறப்பான பலன்களை எதிர்பார்க்க முடியாது. ஆனால், சுக்கிரன் தனுசு ராசியில் அனேக நேரங்கள் சஞ்சரித்து உங்களுக்கு சிறப்பான பலனைத் தருவார். புதன் உங்கள் ராசியின் 9ஆம் வீட்டிற்கு மெதுவாக நகர்ந்து உங்களுக்கு கலவையான பலன்களைத் தருவார். செவ்வாய் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிற்கு பெயர்ந்து உங்களுக்கு பதற்றத்தை அதிகரிப்பதோடு, தூக்கம் இல்லாத இரவுகளையும் உண்டாக்குவார்.


சனி பகவான் மற்றும் குரு இணைந்து டிசம்பர் 2, 2020 அன்று சஞ்சரிப்பதால், உங்களுக்கு இந்த மாதமும் தொடர்ந்து நல்ல அதிர்ஷ்டம் உண்டாகும். குரு ராகுவை ஐந்தாம் பார்வையை பார்வை இடுவதால், இந்த மாதம் உங்களுக்கு போதிய நேர்மறை சக்த்திகளை உண்டாக்குவார். சூரியன் மற்றும் செவ்வாய் சாதகமான இடத்தில் சஞ்சரிக்கவில்லை என்றாலும், உங்கள் உத்தியோகமும், நிதி நிலையில் வளர்ச்சியும் சிறப்பாகவே இருக்கும். மொத்தத்தில் உங்கள் வாழ்க்கையில் பல விடயங்களில் நீங்கள் சிறப்பான முன்னேற்றத்தை காண்பீர்கள்.


Prev Topic

Next Topic