2021 January ஜனவரி மாத வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal for Kanni Rasi (கன்னி ராசி)

வேலை / உத்தியோகம்


உங்கள் உத்தியோக வளர்ச்சியில் நல்ல அதிர்ஷ்டத்தை தரக்கூடிய மற்றுமொரு சிறப்பான மாதமாக இந்த மாதம் இருக்கும். குரு, கேது, சுக்கிரன் நல்ல நிலையில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தருவார்கள். உங்களுக்கு நல்ல நிறுவனத்தில் புது வேலை வாய்ப்பு ஜனவரி 14, 2021 முதல் ஜனவரி 27, வரையிலான காலகட்டத்தில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் அலுவலகத்தில் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டால், அது உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். உங்கள் முதலாளி மற்றும் உடன் வேலை பார்ப்பவர்கள் உங்கள் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள்.
நீங்கள் அரசு உத்தியோகத்திற்கு முயற்சி செய்து கொண்டிருந்தாள், அது உங்களுக்கு ஜனவரி 21, 2021 வாக்கில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் தற்காலிகமாகவோ அல்லது ஒப்பந்தம் ரீதியிலோ வேலை பார்த்துக் கொண்டிருந்தாள், அது முழு நேரமாக மாற வாய்ப்பு உள்ளது. நீங்கள் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் செய்ய விண்ணப்பிக்க இது நல்ல நேரம். உங்கள் உத்தியோக வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வெளிநாட்டிற்கு அடுத்த சில வாரங்களில் குடி பெயருவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.


ஆனால் உங்களுக்கு கிடைத்துள்ள இந்த அதிர்ஷ்டம் அடுத்த 12 வரங்களான மார்ச் இறுதி வாரம் 2021 வரை ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த காலத்திற்குள் நீங்கள் செட்டிலாகி விட முயற்சி செய்ய வேண்டும். ஏப்ரல் 2021 முதல் ஏப்ரல் 2022 வரை நீங்கள் சோதனை காலத்தில் இருப்பீர்கள்.


Prev Topic

Next Topic