![]() | 2021 July ஜூலை மாத ராசி பலன்கள் Rasi Palangal for Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
ஜூலை 2021 ரிஷப ராசி பலன்கள்
சூரியன் உங்கள் ராசியின் 2 மற்றும் 3ஆம் வீட்டில் சஞ்சரிப்பது இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் சிறப்பாக உள்ளது. சுக்கிரன் உங்கள் ராசியின் 3 ம்னற்றும் 4ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தருவார். விரைவாக நகரும் புதன் உங்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு வருவார். ராகு உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து உங்கள் உண்டல் உபாதைகளை அதிகரிக்கக் கூடும். கேது உங்கள் ராசியின் 7ஆம் வீடான களத்திர ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் உறவுகளுடன் உங்களுக்கு பிரச்சனைகளை உண்டாக்குவார்.
சனி பகவான் மற்றும் குரு இந்த மாதம் வக்கிர கதி அடைகிறார்கள். இதனால் உங்களுக்கு வேலை பளுவும் பதற்றமும் அதிகமாக இருக்கும். செவ்வாய் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு ஜூலை 20, 2021 வாக்கில் நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வருவார். மொத்தத்தில் இந்த மாதத்தின் முதல் பாதி உங்களுக்கு சிறப்பாக உள்ளது, அதனைத் தொடர்ந்து சிறு பின்னடைவுகள் ஏற்படலாம்.
நீங்கள் மூச்சு பயிற்சி செய்து சுதர்சன மகா மந்திரம் கேட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும். பெருமாளை வணங்கி உங்கள் நிதி பிரச்சனைகளை குறைத்துக் கொள்ளுங்கள்.
Prev Topic
Next Topic