2021 June ஜூன் மாத பயணம் மற்றும் குடியேற்றம் ராசி பலன்கள் Rasi Palangal for Kataga Rasi (கடக ராசி)

பயணம் மற்றும் குடியேற்றம்


செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியிலும், சுக்கிரன் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிலும், மற்றும் புதன் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் வக்கிர கதி அடைந்த நிலையிலும், இந்த மாதம் பயணம் உங்களுக்கு சிறப்பாக இல்லை. அதிக தாமதங்களும், தொடர்பு குறித்த பிரச்சனைகளும் ஏற்படலாம். பயணத்தின் போது தேவையற்ற மற்றும் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உங்கள் உடல் நலம் பாதிப்பதோடு, மன அழுத்தமும் அதிகரிக்கக் கூடும்.
சூரியன் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால், இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் உங்களுக்கு இருக்கும் விசா பிரச்சனைகளுக்கு தற்காலிக தீர்வு கிடைக்கலாம். ஆனால் உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நீங்கள் உங்கள் விசா அந்தஸ்த்தை இழக்க நேரலாம். உங்கள் கன்சல்டன்சி நிறுவனம் உங்களது விசா ஆவணங்கள் மற்றும் சம்பளத்தை பிடித்து வைத்துக் கொள்வதால் அவர்களுடன் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம்.


Prev Topic

Next Topic