2021 June ஜூன் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Makara Rasi (மகர ராசி)

கண்ணோட்டம்


ஜூன் 2021 மகர ராசி பலன்கள்
சூரியன் உங்கள் ராசியின் 5 மற்றும் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் உங்களுக்கு நல்ல பலனைத் தருவார். ராகு மற்றும் புதன் இணைந்து உங்களுக்கு தொடர்பு குறித்த பிரச்சனைகளை உண்டாக்கி, உங்கள் அதிர்ஷ்டத்தையும் பாதிப்பார்கள். சுக்கிரன் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிலும், 7ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது சிறப்பாக இல்லை.


செவ்வாய் உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு உடல் நல பிரச்சனைகளை உண்டாக்குவார். உங்களுக்கு நல்ல செய்தி என்னவென்றால், சனி பகவான் உங்கள் ஜென்ம ராசியில் வக்கிர கதி அடைந்து உங்களுக்கு நல்ல நிவாரணத்தை தருவது தான். குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் வக்கிர கதி அடைந்து உங்களுக்கு கலவையான பலன்களைத் தருவார். கேது உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக உள்ளது.
மொத்தத்தில் நீங்கள் கலவையான பலன்களைப் பெறுவீர்கள். விரைவாக நகரும் சுக்கிரன், செவ்வாய் மற்றும் புதன் சாதகமற்ற நிலையில் சஞ்சரிப்பதால், பதற்றம் அதிகமாக இருக்கலாம். நீங்கள் மூச்சு பயிற்சி செய்து உங்கள் நேர்மறை சக்தியை விரைவாக அதிகரித்துக் கொள்ள முயற்சிப்பது நல்லது. வரவிருக்கும் மாதங்களில் சில தாமதங்களை நீங்கள் காண்பீர்கள். நவம்பர் 2021 வரை காத்திருந்தால் அதன் பின்னர் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் ஏற்படும்.


Prev Topic

Next Topic