2021 March மார்ச் மாத குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal for Mesha Rasi (மேஷ ராசி)

குடும்பம் மற்றும் உறவுகள்


சுக்கிரன் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டிற்கு பெயருவதால், இந்த அமாதத்டின் முதல் இரண்டு வாரங்களுக்கு உங்களுக்கு சில நிவாரணம் கிடைக்கும். ஆனால், சுக்கிரன் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிற்கு மார்ச் 17, 2021 அன்று பெயருவதால், குறுகிய காலத்திற்கு மட்டுமே இந்த பலன் இருக்கும். உங்கள் குடும்பத்தில் பிரச்சனைகள் தொடர்ந்து இருக்கும். குடும்பத்தில் இருக்கும் அரசியல் இந்த மாதத்தின் 3ஆம் வாரத்தில் அதிகமாக இருக்கும்,. மார்ச் 25, 2021 வாக்கில் உங்களுக்கு சாதகமற்ற செய்திகள் வரலாம்.
நீங்கள் உங்கள் குடும்பத்தினர்களை விட்டு பிரிந்து இருந்தால், அடுத்த ஒருசில மாதங்கள் நீங்கள் பொறுமையாக இருந்து மீண்டும் சேர முயற்சிக்கலாம். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்க மாட்டார்கள். உங்கள் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நிச்சயிக்க இது ஏற்ற நேரம் இல்லை. ஏப்ரல் 5, 2021 வரை அடுத்த 5 வாரங்களுக்கு சுப காரியங்கள் நடத்த முயற்சிப்பது நல்ல யோசனையாக இருக்காது. நீங்கள் முக்கிய முடிவுகள் எடுக்கும் முன், ஒரு முறைக்கு இரண்டு முறை சிந்தித்து பின்னர் செயல்படுவது நல்லது.


வரும் நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றால் நீங்கள் உங்கள் பிறந்த சாதகத்தை சார்ந்தே செயல்பட வேண்டும். விஷ்ணு சஹாசர நாமம் மற்றும் சுதர்சன மகா மந்திரம் கேட்டால் உங்கள் பிரச்சனையின் தாக்கத்தை குறைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.


Prev Topic

Next Topic