![]() | 2021 March மார்ச் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
மார்ச் 2021 கடக ராசி பலன்கள்
சூரியன் உங்கள் ராசியின் 8 மற்றும் 9ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், உங்களால் நல்ல பலனை எதிர்பார்க்க முடியாது. புதன் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல செய்திகளை கொண்டு வருவார். செவ்வாய் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு சிறப்பான செய்திகளை கொண்டு வருவார். சுக்கிரன் நல்ல நிலையில் சஞ்சரித்து நீங்கள் விரைவாக வளர்ச்சியையும், வெற்றியையும் பெற உதவுவார்.
சனி பகவான் மற்றும் குரு இணைந்து உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு சிறப்பான நீச்ச பங்க ராஜ யோகத்தை உண்டாக்குவார்கள். இந்த இணைந்த சஞ்சாரம் உங்கள் வாழ்நாள் கனவுகளை நினைவாக்கும். குரு செவ்வாயை ஐந்தாம் பார்வையாய் பார்வை இடுவதால், இந்த மாதம் உங்களுக்கு பண மழைப் பொழியும்.
ராகு உங்கள் ராசியின் 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்களுக்கு ஆடம்பரமான வாழ்க்கை முறையைத் தருவார். மொத்தத்தில் அனைத்து கிரகங்களும் நல்ல நிலையில் சஞ்சரித்து உங்களுக்கு பெரும் அளவு அதிர்ஷ்டத்தை கொண்டு வருவார்கள். இந்த வாய்ப்புகளை பற்றிக் கொண்டு, நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் செட்டிலாக முயற்சி செய்ய வேண்டும். மூச்சு பயிற்சி செய்து நீங்கள் விரைவாக நேர்மறைப் பலன்களைப் பெற முயற்சி செய்யலாம்.
அடுத்த 5 வாரங்களுக்கு பிறகு ஏப்ரல் 5, 2021 முதல் குரு உங்கள் ராசியின் அஷ்டம ஸ்தானத்திற்கு பெயருவதால் நீங்கள் சோதனை காலத்தில் இருப்பீர்கள் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
Prev Topic
Next Topic