2021 March மார்ச் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Dhanushu Rasi (தனுசு ராசி)

கண்ணோட்டம்


மார்ச் 2021 தனுசு ராசி பலன்கள்
சூரியன் உங்கள் ராசியின் 3 மற்றும் 4ஆம் வீட்டில் சஞ்சரித்து இந்த மாதத்தின் முதல் பாதியில் உங்களுக்கு சிறப்பான பலன்களைத் தருவார். சுக்கிரனும் உங்கள் நிதி வளர்ச்சி மற்றும் உறவுகள் குறித்த விடயங்களில் நலல் நிலையில் சஞ்சரித்து நல்ல உதவிகளைத் செய்வார். புதன் இந்த மாதத்தின் முதல் பாதியில் உங்கள் வளர்ச்சியை அதிகரித்து நல்ல வெற்றியைத் தருவார். ராகு உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிலும், கேது 12ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு தொடர்ந்து சிறப்பான பலன்களைத் தருவார்கள்.


குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் அதிர்ஷ்டத்தின் அளவை பல மடங்கு அதிகரிப்பார். ஏழரை சனியின் தாக்கம் பெரிதாக இருக்காது. நீங்கள் எதை செய்தாலும் அதில் பெரும் அளவு வெற்றிப் பெறுவீர்கள். செவ்வாய் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் இந்த மாதம் முழுவதும் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல தன்னம்பிக்கையை உண்டாக்குவார்.
மொத்தத்தில் இந்த மாதம் உங்களுக்கு சிறப்பான மாதமாக உள்ளது. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நல்ல நிலையில் சஞ்சரிக்க முயற்சிக்கலாம். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் ஒரே இரவில் பணக்காரராகவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் உங்களுக்கு இருக்கும் இந்த அதிர்ஷ்ட்டம் ஏப்ரல் 5, 2021 வரை மட்டுமே என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு, குரு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டிற்கு பெயர்ந்ததும் நீங்கள் அதிக சவால்களை சந்திப்பீர்கள்.


Prev Topic

Next Topic