![]() | 2021 March மார்ச் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
மார்ச் 2021 கன்னி ராசி பலன்கள்
சூரியன் உங்கள் ராசியின் 6 மற்றும் 7ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை இந்த மாதத்தின் முதல் பாதியில் தருவார். சுக்கிரன் உங்கள் ராசியின் 6 மற்றும் 7ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் உறவுகள் குறித்த விடயங்களில் உங்களுக்கு பின்னடைவுகளை மன ரீதியாக உண்டாக்குவார். புதன் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து மார்ச் 11, 2021 முதல் பெரும் அளவு வெற்றியைத் தருவார். கேது உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார்.
செவ்வாய் மற்றும் ராகு இணைந்து உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் அதிர்ஷ்டத்தை பல மடங்கு அதிகரிப்பார்கள். சனி பகவான் உங்கள் ராசியின் 5ஆம் வெட்டில் சஞ்சரித்தாலும், உங்கள் வளர்ச்சியை பாதிக்க மாட்டார். ஏனென்றால் குரு சனி பகவானின் தாக்கத்தை இல்லாமல் செய்வார். குரு உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் 3௦ கோணத்தை நிறைவுச் செய்கிறார். குருவின் நேர்மறை தாக்கத்தை நீங்கள் அதிகம் உணருவீர்கள்.
இந்த மாதம் நீங்கள் எதை செய்தாலும், அதில் பெரும் அளவு வெற்றிப் பெறுவீர்கள். இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு நீங்கள் உங்கள் வாழ்க்கையில் செட்டிலாக முயற்சி செய்யுங்கள். மேலும் ஏப்ரல் 5, 2021 அன்று குரு உங்கள் ராசியின் 6ஆம் வீடான ரூன ரோக சத்ரு ஸ்தானத்திற்கு பெயருவதால் உங்களுக்கு பின்னடைவுகள் ஏற்படலாம்.
Prev Topic
Next Topic