2021 May மே மாத ராசி பலன்கள் Rasi Palangal for Mesha Rasi (மேஷ ராசி)

கண்ணோட்டம்


மே 2021 மேஷ ராசி பலன்கள்
சூரியன் உங்கள் ராசியின் 1 மற்றும் 2ஆம் வீட்டிற்கு பெயருவது இந்த மாதம் முழுவதும் உங்களுக்கு சாதகமற்ற நிலையை காட்டுகிறது. சுக்கிரன் மற்றும் புதன் இந்த மாதம் அனேக நேரங்களில் உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் சஞ்சரிப்பார்கள். செவ்வாய் உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு நல்ல செய்திகள் வரும்.


குரு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் வளர்ச்சியையும், வெற்றியையும் அதிகரிப்பார். குரு செவ்வாயை பார்வை இடுவதால் உங்கள் அதிர்ஷ்டம் பல மடங்கு அதிகரிக்கும். சனி பகவான் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரித்து இந்த மாதத்தின் முதல் பாதியில் உங்கள் உத்தியோக வாழ்க்கையை பாதிப்பார்.
மொத்தத்தில் இந்த மாதம் நீண்ட காலத்திற்கு பிறகு உங்களுக்கு ஒரு சிறப்பான மாதமாக இருக்கும். மே 2௦, 2021 வாக்கில் உங்களுக்கு நல்ல செய்திகள் வரும். இந்த வாய்ப்புகளை பற்றிக் கொண்டு, இந்த மாதம் உங்கள் வாழ்க்கையில் செட்டிலாக முயற்சி செய்யுங்கள்.



Prev Topic

Next Topic