2021 May மே மாத உடல் நலம் ராசி பலன்கள் Rasi Palangal for Makara Rasi (மகர ராசி)

உடல் நலம்


சனி பகவான் உங்கள் ஜென்ம ராசியிலும், ராகு உங்கள் ராசியின் 5ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு அதிக பதற்றத்தை உண்டாக்குவார்கள். ஆனால் மற்ற கிரகங்கள் நல்ல நிலையில் சஞ்சரிக்கின்றன. செவ்வாய் மற்றும் சுக்கிரன் சிறப்பான நிலையில் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை தருவார்கள். குரு உங்களுக்கு நீண்ட காலமாக இருந்த நோய் மற்றும் கண்டறிய முடியாத பிரச்சனைகளுக்கு இப்போது நிரந்தர தீர்வைத் தருவார்.
உங்கள் மனைவி/ கணவன், குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் உடல் நலத்தில் பெரும் அளவு முன்னேற்றம் ஏற்படும். உங்கள் மருத்துவ செலவுகள் பெரும் அளவு குறையும். இந்த மாதம் முழுவதும் உங்கள் தோற்றத்தை மேம்படுத்திக் கொள்ள அழகு சார்ந்த அறுவைசிகிச்சை செய்து கொள்ள சிறந்த நேரமாக உள்ளது. மூச்சு பயிற்சி செய்து நீங்கள் நேர்மறை சக்திகளை அதிகரித்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.


Prev Topic

Next Topic