![]() | 2021 May மே மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
மே 2021 கன்னி ராசி பலன்கள்
சூரியன் உங்கள் ராசியின் 8 மற்றும் 9ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் வாழ்க்கையின் பல விடயங்களில் பிரச்சனைகளை உண்டாக்குவார். புதனால் நீங்கள் கலவையான பலன்களை காண்பீர்கள். ராகு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரித்து விடயங்களை மேலும் மோசமாக்குவார். கேது உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு தொடர்ந்து நல்ல பலன்களைத் தருவார். சுக்கிரன் உங்கள் ராசியின் 9ஆம் வீடான பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்களுக்கு சில நிவாரணத்தை தருவார்.
செவ்வாய் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் வேலை பளு மற்றும் பதற்றத்தை அதிகரிப்பார். சனி பகவான் உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு அதிகரிக்கும் பிரச்சனைகளால் பீதி அடையும் நிலையை உண்டாக்குவார். குரு உங்கள் ராசியின் 6ஆம் வீடான ரூன ரோக சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் அலுவலகத்தில் கடுமையான வாக்குவாதங்களை உண்டாக்குவார்.
நீங்கள் தற்போது கடுமையான சோதனை காலத்தை கடக்கின்றீர்கள். நீங்கள் உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு இந்த சோதனை காலத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் அடுத்த 6 – 7 வாரங்கள் காத்திருந்தால் உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
Prev Topic
Next Topic