![]() | 2021 November நவம்பர் மாத வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | வேலை / உத்தியோகம் |
வேலை / உத்தியோகம்
கடந்த மாதம் நீங்கள் தடைகளை சந்தித்திருந்திருப்பீர்கள். அலுவலகத்தில் நடக்கும் விடயங்களால் உங்கள் மனதில் பதற்றமும், பீதியும் நிறைந்திருந்திருக்கும். ஆனால், உங்களுக்கு இருந்த சோதனை காலம் குறைந்த காலகட்டத்திற்கே என்பதால், விடயங்கள் விரைவில் இலகுவாகும். நவம்பர் 19, 2021 முதல் உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கத் தொடங்கும். உங்கள் அலுவலகத்தில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால், அது உங்களுக்கு சாதகமாகவே அமையும்.
நீங்கள் புதிய வேலை வாய்ப்புக்கு முயற்சி செய்கின்றீர்கள் என்றால், நல்ல வேலை வாய்ப்பைப் பெற இது ஏற்ற நேரம். நீங்கள் ஒப்பந்தம் ரீதியாக வேலை பார்கின்றீர்கள் என்றால், இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் அது முழு நேர உத்தியோகமாக மாறும் வாய்ப்பு அதிகம் உள்ளது. உங்கள் வேலை பளு மற்றும் பதற்றம் குறையும். உங்கள் அலுவலக வாழ்க்கையை எளிதாக சமாளிப்பீர்கள். உங்கள் முதலாளி மற்றும் உடன் வேலை பார்ப்பவர்கள் உங்கள் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள்.
நல்ல முன்னேற்றம் தரக்கூடிய ப்ரொஜெக்டில் வேலை பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும். அடுத்த 3 முதல் 6 மாதங்களில் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இடமாற்றம், வெளிநாட்டிற்கு குடிபெயர்வு, குடியேற்றம் அல்லது இன்சூரன்ஸ் போன்ற பலன்களை உங்கள் நிறுவனத்தில் இருந்து பெறுவீர்கள். வெளிநாட்டில் வேலை வாய்ப்புக்கு முயற்சிக்க இது நல்ல நேரம். மொத்தத்தில், உங்கள் உத்தியோக வளர்ச்சியில் நவம்பர் 19, 2021 முதல் நீங்கள் நல்ல வளர்ச்சியைப் பெறுவீர்கள்.
Prev Topic
Next Topic