2021 November நவம்பர் மாத வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal for Kataga Rasi (கடக ராசி)

வேலை / உத்தியோகம்


குரு, ராகு மற்றும் புதன் உங்களுக்கு குறுகிய காலத்திற்கு நல்ல உதவிகளை செய்வார். நவம்பர் 18, 2021 க்கு முன் நீங்கள் புதிய நிறுவனத்தில் இருந்து கிடைக்கும் புதிய வேலை வாய்ப்பை ஏற்றக் கொள்ளலாம். ஆனால், நீங்கள் புதிய வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால், அதற்கான காலம் முடிந்துவிட்டது. எனவே, மே 2022 வரை அடுத்த 6 மாதங்களுக்கு காத்திருந்து, அதன் பின்னரே நீங்கள் புதிய வாய்ப்புகளுக்கு முயற்சிக்க வேண்டும்.
இந்த மாதம் நாட்கள் நகர நகர எதிர்மறை சக்திகள் அதிகரிக்கக்கூடும். நவம்பர் 25, 2021 முதல் நீங்கள் கசப்பான அனுபவனகளை சந்திப்பீர்கள். சனி பகவான் உங்கள் ராசியின் 7 ஆம் வீட்டிலும், குரு உங்கள் ராசியின் 8 ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது சாதகமற்ற சஞ்சாரமாகும். இதனால் அதிக தடைகளும், உங்களுக்கு எதிரான சதிகளும் நடக்கும். இது உங்கள் உத்தியோக வளர்ச்சியை பாதிக்கும்.


நவம்பர் 18, 2021 க்கு பிறகு உங்கள் அலுவலகத்தில் நடக்கும் மாற்றங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தராது. உங்கள் வேலை பளு மற்றும் பதற்றம் அதிகரிக்கும். நீங்கள் உங்கள் பிறந்த சாதக பலனை பார்த்து அதற்கு ஏற்றவாறு நடந்து மே 2022 வரை உள்ள இந்த சோதனை காலத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும்.
அடுத்த சில மாதங்கள் எதிர்பாராத சூழ்நிலைகள் நிகழலாம் என்பதால் நீங்கள் உங்களை பாதுகாத்துக் கொள்ள போதிய பணத்தை சேமிக்க முயற்சி செய்ய வேண்டும். நவம்பர் 18, 2021 வரை விசா ஸ்டாம்பிங் செய்ய நேரம் சிறப்பாக உள்ளது.


Prev Topic

Next Topic