![]() | 2021 November நவம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
நவம்பர் 2021 சிம்ம ராசிப் பலன்கள் . சூரியன் உங்கள் ராசியின் 3 மற்றும் 4 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இந்த மாதத்தின் முதல் பாதியில் நல்ல பலன்கள் உண்டாகும். சுக்கிரன் உங்கள் ராசியின் 5 ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக உள்ளது. செவ்வாய் உங்கள் ராசியின் 3 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் இந்த மாதம் முழுவதும் நல்லப் பலன்களை பெறுவீர்கள். புதன் உங்களுக்கு இந்த மாதத்தின் இரண்டாம் பாதியில் நல்ல பலனைத் தருவார்.
ராகு மற்றும் கேதுவிடம் இருந்து உங்களால் எந்த பலனையும் எதிர்பார்க்க முடியாது. சனி பகவான் உங்கள் ராசியின் 6 ஆம் வீட்டில் சஞ்சரித்து இந்த மாதம் உங்களுக்கு பெரும் அளவு அதிர்ஷ்டத்தை தருவார். குரு நல்ல நிலையில் சஞ்சரிக்கவில்லை என்றாலும், அது ஒரு குறுகிய காலத்திற்கு இந்த மாதத்தின் முதல் சில நாட்களுக்கு மட்டுமே. அதன் பிறகு நவம்பர் 6, 2021 முதல் உங்கள் உத்தியோகத்திலும், நிதி நிலையிலும் நல்ல வளர்ச்சி உண்டாகத் தொடங்கும்.
நவம்பர் 25, 2021 முதல் இந்த மாதம் உங்களுக்கு சிறப்பான நல்ல அதிர்ஷ்டங்கள் நிறைந்த மாதமாக இருக்கும். வரவிருக்கும் மாதங்களும் சிறப்பாக இருப்பதால், உங்கள் வாழ்க்கையில் பொற்காலம் உண்டாகத் தொடங்கும். அடுத்த 6 மாத காலத்தில் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நல்ல நிலையில் செட்டிலாகி விடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
Prev Topic
Next Topic