![]() | 2021 November நவம்பர் மாத வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal for Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | வேலை / உத்தியோகம் |
வேலை / உத்தியோகம்
இந்த மாதத்தின் தொடக்கம் உங்கள் உத்தியோகம் சார்ந்த விடயங்களுக்கு சிறப்பாக உள்ளது. நீங்கள் புதிய வேலை வாய்ப்பை ஏற்றுக் கொண்டு புதிய நிறுவனத்தில் நவம்பர் 18, 2021 க்கு முன் சேரலாம். ஆனால், அதன் பிறகு நீங்கள் புதிய வேலைக்கு முயற்சிக்க வேண்டும், நேர்காணலில் பங்குபெற வேண்டும் என்று நினைத்தால், அதற்கு இது ஏற்ற நேரமாக இருக்காது. நீங்கள் அடுத்த 6 மாதங்கள் காத்திருந்து அதன் பின்னர் மே 2022 க்கு பிறகு நீங்கள் புதிய வேலைக்கு முயற்சிக்கலாம். உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
குரு உங்கள் ராசியின் 6 ஆம் வீடான ருன ரோக சத்ரு ஸ்தானத்திற்கு பெயருவதால் எதிர்மறை சக்திகள் அதிகரிக்கலாம். நவம்பர் 25, 2021 முதல் உங்களுக்கு கசப்பான அனுபவங்கள் ஏற்படலாம். அலுவலகத்தில் அரசியல் அதிகரிக்கலாம். உங்கள் வேலை பளுவும் அழுத்தமும் அதிகரிக்கலாம்.
சனி பகவான் உங்கள் ராசியின் 5 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்கள் சொந்த வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளால் உங்கள் அலுவலக வேலைகளில் உங்களால் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். உங்கள் வளர்ச்சி பாதிக்கப்படலாம். உங்களுடன் வேலை பார்ப்பவர்கள் உங்களது இந்த பலவீனமான நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள். நவம்பர் 25, 2021 முதல் அடுத்த 6 மாதங்களுக்கு நீங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
அடுத்த சில மாதங்களில் ஒருவேளை நீங்கள் உங்கள் உத்யோகக்கை விட்டுவிட வேண்டிய சூழல்கள் ஏற்பட்டால், அதனை சமாளிக்க போதிய அளவு சேமிப்பை வைத்துக் கொண்டு உங்களை பாதுகாத்துக் கொள்ள முயற்சிப்பது நல்லது. நவம்பர் 18, 2021 வரை விசா ஸ்டாம்பிங் செய்ய ஏற்ற நேரமாக உள்ளது.
Prev Topic
Next Topic