2021 October அக்டோபர் மாத உடல் நலம் ராசி பலன்கள் Rasi Palangal for Midhuna Rasi (மிதுன ராசி)

உடல் நலம்


இந்த மாதம் நாட்கள் நகர நகர உங்கள் உடல் நலம் பாதிக்கப்படலாம். உங்கள் சொந்த வாழ்க்கையில் அதிகரிக்கும் பிரச்சனைகள் மற்றும் மனக் கவலையால் நீங்கள் நல்ல தூக்கத்தை இழப்பீர்கள். உங்களுக்கு சளி, சுரம், ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையின் அளவு அதிகரிக்கலாம். உடற்பயிற்சி செய்யாததாலும், அதிக எண்ணை பொருட்களை உண்பதாலும், உங்கள் உடல் எடை அதிகரிக்கலாம்.
உங்கள் குடும்பத்தினர்களின் உடல் நலம் பாதிக்கப்படலாம். உங்கள் மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம். போதிய மருத்துவ காப்பீட்டை எடுத்துக் கொள்வதை உறுதி செய்து கொள்ளுங்கள். அக்டோபர் 17, 2021 வாக்கில் எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கலாம். இதனால் உங்கள் மன நிம்மதியும் பாதிக்கப்படலாம். செவ்வாய் தோறும் துர்க்கை அம்மனை வழிபட்டு, ஹனுமான் சாலிசா கேட்டு வருவதால் சற்று ஆறுதலாக இருக்கும்.


Prev Topic

Next Topic