![]() | 2021 October அக்டோபர் மாத குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal for Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | குடும்பம் மற்றும் உறவுகள் |
குடும்பம் மற்றும் உறவுகள்
எதிர்பாராவிதமாக, உங்கள் சொந்த வாழ்க்கை மற்றும் உறவுகள் மிக மோசமாக பாதிக்கப்படலாம். நீங்கள் இந்த மாதம் தோல்விகளையும், ஏமாற்றங்களையும் சந்திக்கக நேரலாம். மேலும் உங்கள் வாழ்க்கைத்துனையுடன் உங்களுக்கு கடுமையான சண்டைகளும், கருத்துவேறுபாடுகளும் ஏற்படலாம். நீங்கள் கவனமாக இல்லை என்றால், அக்டோபர் 16, 2021 வாக்கில் நீங்கள் பிரியவும் வாய்ப்பு உள்ளது. மிகவும் பொறுமையாக இருந்து உங்கள உறவை நல்ல நிலையில் பாதுகாத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
அக்டோபர் 16, 2021 வாக்கில் நீங்கள் எதிர்பாராத சாதமற்ற செய்தியை கேட்க நேரலாம். உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்க மாட்டார்கள். நீங்கள் அதிக உணர்ச்சிவசப்படுவதால், இந்த மாதமும் அதன் காரணமாகவே பாதிக்கப்படுவீர்கள். உங்கள் மீது எந்த தவறும் இல்லை என்றாலும், நீங்கள் அவமானப்படும் சூழல் ஏற்பட்டால், அதில் ஆச்சரியபபட ஒன்றும் இல்லை.
வரவிருக்கும் பெயர்ச்சியால், நீச்ச பங்க ராஜ யோகம் ஏற்படுவதால், சனி பகவானின் தாக்கம் சற்று குறைவாக இருக்கும் என்பதால் அக்டோபர் 21, 2021 முதல் உங்களுக்கு சற்று உதவிகள் கிடைக்கத் தொடங்கும். உங்கள் நண்பர்கள் மற்றும் ஆன்மீக குர்வால் அக்டோபர் 21, 2021 க்கு மேல் உங்களுக்கு சற்று ஆதரவு கிடைக்கும்.
அக்டோபர் 21, 2021க்கு மேல் நீங்கள் சுப காரியங்கள் நிகழ்த்த முயற்சிக்கலாம். ஆனால் மன உளைச்சலும், மனக் கவலையும் அதிகமாக இருக்கும்.
Prev Topic
Next Topic