![]() | 2021 September செப்டம்பர் மாத வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal for Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | வேலை / உத்தியோகம் |
வேலை / உத்தியோகம்
நல்ல அதிர்ஷ்டம் நிறைந்த மற்றுமொரு சிறப்பான மாதமாக இந்த மாதம் உங்களுக்கு இருக்கும். உங்கள் உத்தியோக வாழ்க்கையை நீங்கள் சிறப்பாக சமாளிப்பீர்கள். செப்டம்பர் 15, 2021 வாக்கில் நேர்காணலில் தேர்ச்சிப் பெற்று புதிய வேலை வாய்ப்பைப் பெறுவீர்கள். ஆனால் சம்பளம் மற்றும் இடமாற்றம் போன்ற விடயங்களில் நீங்கள் அதிக எதிர்பார்ப்புகளை வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. உங்கள் பிறந்த சாதகம் பலவீனமாக இருக்கும் நேரத்தில் நீங்கள் அதிக எதிர்பார்புகளை வைத்தால், உங்களுக்கு கிடைத்த நல்ல வேலை வாய்ப்பு அஷ்டம சனியால் கை நழுவி போய் விடவும் வாய்ப்பு உள்ளது.
அப்படியே உங்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைத்து விட்டாலும், நீங்கள் அக்டோபர் 5, 2021 க்கு முன்பே புதிய நிறுவனத்தில் சேர்ந்து விடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு பின்புலன் விசாரணை நடக்கும் நிலையில், அடுத்த 2 முதல் 3 மாதங்களுக்கு உங்கள் உத்தியோகம் உறுதி செய்யப்படுவது தாமதமாகலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், பின்புலன் விசாரணை மற்றும் விசா சார்ந்த சிக்கல்களால் நீங்கள் உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை இழக்கும் நிலையம் ஏற்படலாம்.
உங்களுக்கு செயல்திறன் சார்ந்த ஏதாவது கருத்து எழுந்திருந்தால், உங்களுடன் வேலை பார்க்கும் ஊழியர்களின் உதவியோடு அதனை இந்த மாதமே சரி செய்து விடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். அக்டோபர் 1௦, 2021 முதல் அடுத்த 6 வாரங்களுக்கு உங்களுக்கு சாதகமற்ற செய்திகள் வரலாம். டிசம்பர் 2021 முதல் வாரம் முதல் உங்கள் உத்தியோக வாழ்க்கை மீண்டும் நல்ல நிலைக்குத் திரும்பும்.
இந்த மாதம் உங்கள் அலுவலகத்தில் எந்த பிரச்சனைகளும் உங்களுக்கு இருக்காது. ஆனால் அடுத்த இரண்டு மாதங்கள் மிகவும் மோசமாக உள்ளது. நீங்கள் வரவிருக்கும் மோசமான சூழலை சமாளிக்க தயாராக வேண்டும்.
Prev Topic
Next Topic