2021 September செப்டம்பர் மாத வேலை / உத்தியோகம் ராசி பலன்கள் Rasi Palangal for Thula Rasi (துலா ராசி)

வேலை / உத்தியோகம்


அடுத்த இரண்டு வாரங்களுக்கு நீங்கள் தொடர்ந்து நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள். உங்கள் உத்தியோக வாழ்க்கை சிறப்பாக இருக்கும். செப்டம்பர் 15, 2021 க்கு முன் உங்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆனால் சம்பளம் மற்றும் இடமாற்றம் போன்ற விடயங்களில் நீங்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். உங்கள் பிறந்த சாதகம் பலவீனமாக இருந்தால், அதிகம் எதிர்பார்க்காமல், கிடைக்கும் நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பது நல்லது.
செப்டம்பர் 16, 2021 க்கு மேல் விடயங்கள் நீங்கள் எதிர்பார்ப்பது போல நடக்காமல் போகலாம். புதிய நிறுவனத்தில் சேரும் விடயங்களில் எதிர்பாராத தாமதங்களும், பின்னடைவுகளும் ஏற்படலாம். பின்புலன் விசாரணை மற்றும் விசா சார்ந்த விடயங்களில் தேக்க நிலை ஏற்படலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், பின்புலன் விசாரணை அல்லது விசா காரணமாக அக்டோபர் இரண்டாம் வாரம் வாக்கில் நீங்கள் உங்களுக்கு கிடைத்த நல்ல வேலை வாய்ப்பை இழக்க நேரலாம்.


உங்களுடன் வேலை பார்க்கும் ஊழியர்களிடம் இருந்து உங்கள் செயல்திறன் காரணமாக உங்களைப் பற்றி பின்னூட்டம் அல்லது கருத்துக்கள் வந்திருந்தாள் அது சார்ந்த விடயங்களை செப்டம்பர் 15, 2021 க்குள் சரி செய்து விட முயற்சி செய்யுங்கள். அக்டோபர் 1௦, 2021 முதல் அடுத்த 6 வாரங்களுக்கு உங்களுக்கு சாதகமற்ற செய்திகள் வரலாம். டிசம்பர் 2021 முதல் வாரத்திற்கு பிறகு உங்கள் உத்தியோக வாழ்க்கை நல்ல நிலைக்கு மீண்டும் மாறும்.


Prev Topic

Next Topic