![]() | 2021 September செப்டம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
செப்டம்பர் 2021 மீன ராசிப் பலன்கள்
சூரியன் உங்கள் ராசியின் 6 மற்றும் 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பது இந்த மாதத்தின் முதல் பாதியில் சிறப்பாக உள்ளது. புதன் உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக இல்லை. செவ்வாய் உங்கள் ராசியின் 7ஆம் வீட்டிற்குப் பெயருவதால் சில பின்னடைவுகளை நீங்கள் செப்டம்பர் 6, 2021 முதல் சந்திக்க நேரலாம். சுக்கிரன் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்கள் குடும்பத்தினர்களுடன் இருக்கும் உறவு மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும்.
ராகு உங்கள் ராசியின் 3ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக உள்ளது. கேது உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்கள் வெற்றியும் வளர்ச்சியும் குறைவாகவே இருக்கும். சனி பகவான் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரித்து செப்டம்பர் 29, 2021 முதல் உங்களுக்குப் பெரும் அளவு அதிர்ஷ்டத்தை தரத் தொடங்குவார். வக்கிர கதி அடைந்த குரு இந்த மாதம் உங்களுக்கு அதிக செலவுகளை உண்டாக்குவார்.
இந்த மாதம் நாட்கள் நகர நகர நேர்மறை சக்தியின் அளவு அதிகரித்துக் கொண்டே போகும். குரு மற்றும் சனி பகவான் இணைந்து அக்டோபர் மற்றும் நவம்பர் 2021 மாதங்களில் சஞ்சரிப்பதால் உங்கள் வளர்ச்சி விண்ணைத் தொடும் அளவு அதிகரிக்கும். மொத்தத்தில், ஏப்ரல் 2022 வரை உங்களுக்கு நேரம் சிறப்பாக உள்ளது. நீங்கள் அடுத்த 6 முதல் 8 மாதங்களில் உங்கள் வாழ்க்கையின் முக்கிய குறிக்கோள்களை அடைவீர்கள்.
Prev Topic
Next Topic