![]() | 2021 September செப்டம்பர் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | கண்ணோட்டம் |
கண்ணோட்டம்
செப்டம்பர் 2021 ரிஷப ராசிப் பலன்கள்
சூரியன் உங்கள் ராசியின் 4 மற்றும் 5ஆம் வீட்டில் சஞ்சரிப்பது இந்த மாதம் சிறப்பாக இல்லை. சுக்கிரன் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டில் சஞ்சரித்து இந்த மாதம் நாட்கள் நகர நகர உங்களுக்கு உடல் நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். உங்கள் பூர்வ புண்ய ஸ்தானத்தில் உச்சம் பெற்ற புதனிடம் இருந்து உங்களால் நல்லப் பலனை எதிர்பார்க்க முடியாது. உங்கள் ராசியின் 5 ஆம் வீட்டில் செப்டம்பர் 6, 2021 முதல் செவ்வாய் சஞ்சரித்து உங்கள் மனக் கவலையை அதிகரிக்கக் கூடும்.
உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் வக்கிர கதி அடைந்த சனி பகவான் உங்களுக்கு நல்லப் பலனைத் தருவார். ஆனால் வக்கிர கதி அடைந்த குரு மீண்டும் உங்கள் ராசியின் 9ஆம் வீட்டிற்கு செப்டம்பர் 16, 2021 அன்று பெயருவார். இதனால் நீங்கள் கசப்பான அனுபவங்களைப் பெறுவீர்கள். ராகு உங்கள் ஜென்ம சதானதிலும், கேது உங்கள் களத்திர ஸ்தானத்திலும் சஞ்சரித்து உங்கள் உடல் நலம் மற்றும் உறவுகளில் பிரச்சனைகளை உண்டாக்கக் கூடும்.
மொத்தத்தில் இது உங்களுக்கு ஒரு சவாலான மாதமாக இருக்கும். உங்களுக்கு ஏமாற்றங்களும், தோல்விகளும் ஏற்பட நேரலாம். நீங்கள் அடுத்த 7 வாரங்களுக்கு அக்டோபர் 19, 2021 வரை சோதனை காலத்தில் இருப்பீர்கள். நீங்கள் பொறுமையாக இருந்து, உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் இந்த கடுமையான காலகட்டத்தை கடக்க முயற்சி செய்ய வேண்டும். மூச்சு பயிற்சி செய்து சுதர்சன மகா மந்திரம் கேட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும்.
Prev Topic
Next Topic