2022 August ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Kataga Rasi (கடக ராசி)

கண்ணோட்டம்


ஆகஸ்ட் 2022 கடக ராசி பலன்கள் (Cancer Moon Sign). சூரியன் உங்கள் ராசியின் 1 மற்றும் 2 ஆம் வீட்டில் சஞ்சரித்து இந்த மாதம் உங்கள் உடல்நலத்தை பாதிப்பார். புதன் உங்கள் ராசியின் 2 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் நல்ல பலனை எதிர்பார்க்கலாம். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசிக்கு ஆகஸ்ட் 7, 2022 அன்று பெயர்ச்சி ஆவதால் நீங்கள் உங்கள் உறவுகள் சார்ந்த விடயங்களில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். செவ்வாய் உங்கள் ராசியின் 11 ஆம் வீடான லாப ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகி உங்கள் அதிர்ஷ்டத்தை அதிகரிப்பார்.
ராகு மற்றும் கேது இந்த மாதம் நல்ல நிலையில் சஞ்சரிக்கவில்லை. உங்கள் ராசியின் களத்திற ஸ்தானத்தில் வக்கிர கதி அடைந்த சனி பகவான் உங்களுக்கு நல்ல பலன்களைத் தருவார். உங்களுக்கு இருக்கும் ஒரு முக்கிய பலவீனமான விடயம் என்னவென்றால் குரு உங்கள் ராசியின் 9 ஆம் வீட்டில் வக்கிர கதி அடைவது தான். இதனால் நீங்கள் அடுத்த நிலைக்கு செல்ல முடியாமல் தடைகளையும் தாமதங்களையும் சந்திப்பீர்கள்.


விரைவாக நகரும் கிரகங்கள் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால் நீங்கள் ஆகஸ்ட் 16, 2022 க்கு மேல் உங்கள் பண வரத்து அதிகரிப்பதை காண்பீர்கள். மேலும் உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்களுடன் நேரம் செலவிடுவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஆனால் விடயங்களில் தாமதங்கள் ஏற்படுவதால் உங்களால் உங்கள் இலக்கை அடைய முடியாமல் போகலாம்.
தற்போது இருக்கும் காலத்தில் நீங்கள் அதிக முயற்சிகள் எடுக்க வேண்டும். நவம்பர் 2022 வாக்கில் மட்டுமே உங்கள் வாழ்க்கையில் ஒரு மிகப் பெரிய முன்னேற்றத்தை நீங்கள் காண்பீர்கள். பெருமாளை வணங்கி உங்கள் நிதி நிலையில் அதிர்ஷ்டத்தைப் பெறுங்கள்.


Prev Topic

Next Topic