2022 August ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் Rasi Palangal for Makara Rasi (மகர ராசி)

கண்ணோட்டம்


ஆகஸ்ட் 2022 மகர ராசி பலன்கள் (Capricorn Moon Sign). சூரியன் உங்கள் ராசியின் 7 மற்றும் 8 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் இந்த மாதம் சிறப்பான பலன்களை எதிர்பார்க்க முடியாது. புதன் உங்கள் ராசியின் 8 ஆம் வீட்டில் சஞ்சரித்து ஆகஸ்ட் 21, 2022 வரை உங்களுக்கு தொலைதொடர்பு சார்ந்த விடயங்களில் நல்ல முன்னேற்றத்தை தருவார். உங்கள் உடல்நலம் மற்றும் உறவுகள் சார்ந்த விடயங்கள் இந்த மாதம் பாதிக்கப்படலாம். செவ்வாய் உங்கள் ராசியின் 5 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு பதற்றம் மற்றும் மனக் கவலையை ஏற்படுத்துவார்.
ராகு உங்கள் ராசியின் 4 ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு இந்த மாதம் கலந்த பலன்களைத் தருவார். கேது உங்கள் ராசியின் 1௦ ஆம் வீட்டில் சஞ்சரிப்பது சிறப்பாக இல்லை. சனி பகவான் உங்கள் ஜென்ம ராசியில் வக்கிர கதி அடைவதால் உங்களுக்கு உத்தியோகம் மற்றும் நிதி நிலையில் வளர்ச்சி சார்ந்த விடயங்களில் இந்த மாதம் சிறப்பான பலன்கள் கிடைக்கும். குரு உங்கள் ராசியின் 3 ஆம் வீட்டில் வக்கிர கதி அடைவதால் சிறப்பான பலனைப் பெறுவீர்கள்.


மொத்தத்தில் இது உங்களுக்கு நல்ல முன்னேற்றம் தரக்கூடிய மாதமாக இருக்கும். நீங்கள் முக்கிய கிரகங்கள் நல்ல நிலையில் சஞ்சரிப்பதால் சிறப்பன அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள். ஆனால் உங்களுக்கு கிடைத்துள்ள இந்த அதிர்ஷ்ட்டம் அக்டோபர் 18, 2022 வரை ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றால் அதனை அக்டோபர் 18, 2022 க்கு முன் நீங்கள் செய்வது நல்லது.
குறிப்புள் அக்டோபர் 18, 2022 முதல் பெப்ரவரி 28, 2022 வரை உங்கள் வாழ்க்கையில் ஒரு மோசமான காலகட்டமாக மாறலாம் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.


Prev Topic

Next Topic