2022 August ஆகஸ்ட் மாத குடும்பம் மற்றும் உறவுகள் ராசி பலன்கள் Rasi Palangal for Simma Rasi (சிம்ம ராசி)

குடும்பம் மற்றும் உறவுகள்


வக்கிர கதி அடைந்த குரு உங்கள் ராசியின் 8 ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உறுவுகள் சார்ந்த விடயங்கள் சற்று நலல் நிலையிலேயே இருக்கும். நீங்கள் உங்கள் குடும்பத்தினர்களின் தேவைகளை புரிந்து கொள்ள அதிக நேரத்தை அவர்களுடன் செலவு செய்வீர்கள். உங்கள் குழந்தைகள் தங்களது தவறுகளை உணர்ந்து உங்கள் பேச்சை கேட்கத் தொடங்குவார்கள். சுப நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்களில் பங்குபெறுவதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
உங்கள் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் நிச்சயிக்கும் விடயங்களில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். நவம்பர் 18, 2022 க்கு முன்பே அவர்களுக்கு திருமணம் நிச்சயமாகி திருமணமும் நடந்து விடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், நவம்பர் 18, 2022 க்கு மேல் விடயங்கள் சரியாக நடக்காமல் போகலாம். மேலும் மோசமான சூழலில் டிசம்பர் 2022 அல்லது ஜனவரி 2023 வாக்கில் திருமணம் இரத்தாகவும் வாய்ப்பு உள்ளது.


உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்களுடன் நீங்கள் நல்ல நேரத்தை மகிழ்ச்சியுடன் செலவு செய்வீர்கள். ஆகஸ்ட் 9, 2022 வாக்கில் உங்களுக்கு நல்ல செய்திகள் வரும். இந்த மாதத்தின் முதல் 3 வாரங்களுக்கு உறவினர்கள் உங்கள் வீட்டிற்கு வருகை தருவதால் சில செலவுகள் ஏற்படலாம்.


Prev Topic

Next Topic